உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil

உருளைக்கிழங்கு நன்மைகள் | Urulaikilangu in Tamil

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil

நம் வீட்டில் சமையல் அறையில் அதிகப்படியான கிழங்கு வகைகள் உள்ளன . ஆனால்
சொலானாம் ட்டுயூபுரோசம் என்ற விஞ்ஞான பெயரைக் கொண்ட கிழங்கு.

ஒரு சரியான வடிவமே இல்லாமல் அல்கற்றதாக காணப்படும்.
அப்படி இருந்தும் உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒரு கிழங்கு ஆகவே உள்ளது .

அதிக சத்து உள்ளதும் எழுதில் சமைக்க கூடியதும் ஆகிய உருளைக்கிழங்கில் அதிக அளவு கலோரிகள் கிடைக்கின்றன .

எளிதில் ஜீரணமாகக் கூடிய இந்த கிழங்கில் வைட்டமின்கள் , தாது உப்புகள் அதிகம் காணப்படுகின்றன . இந்த கிழங்கு அதிக நார்ச்சத்தும் கொண்டுள்ளது .

சத்துக்கள்

நூறு கிராம் உருளைக் கிழங்கில் உள்ள சத்துகளை பார்ப்போம் .

இதில் புரதம் இரண்டு சதவீதமும் , கொழுப்பு பூஜ்ஜியம் புள்ளி ஒன்று சதவீதமும் , தாதுஉப்புகள் பூஜ்ஜியம் புள்ளி ஆறு ஒன்று சதவீதமும் உள்ளது .

நார்ச்சத்து பூஜ்யம் புள்ளி நான்கு ஒன்று சதவீதமும் , கார்போஹைட்ரெட் வைடமின் சி பதினேழு மில்லி கிராமும் , கால்சியம் பத்து மில்லி கிராமும் , பாஸ்பரஸ் நாற்பது மில்லி கிராமும் உள்ளது.

வைடமின் எ , வைடமின் பி முதலியனவையும் உள்ளன. சோடா உப்பு மற்றும் பொட்டாசியம் ஆகிவை இதில் அதிக அளவில் உள்ளன .

சாதாரண அளவில் ஒரு உருளைக்கிழங்கில் மூன்று புள்ளி இரண்டு கிராம் அளவு கூட புரதச்சத்து கிடைக்கிறது. .

உருளைக்கிழங்கில் கார்போஹைடிரேட் அதிகம் இருப்பதால் அது சுலபமான செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் .

செரிமான பிரட்சனை தீர்க்கும்

உருளைக்கிழங்கு தோல்லுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்.

அதனால் நோயாளிகள் குழந்தைகள் மற்றும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது .

சருமத்திற்கு ஏற்றது

இதில் வைட்டமின் ஸி , வைடமன் பி மற்றும் பொட்டாசியம் மெக்னிசியயம் பாஸ்பரஸ், ஜிங் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.

பச்சை உருளக்கிழங்கை அரைத்து எடுத்து அதனை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும்.

மேலும் இது சருமத்தில் உள்ள சிறு சிறு புள்ளிகள் மற்றும் பருவினை குணப்படுத்தும்.

நமது முகம் காலையில் எழுந்த உடன் புத்துணர்வுடன் இருக்க இரவு தூங்க செல்வதற்கு முன்னர் இதை சித்தாள் போதும்.
பச்சை உருளைக்கிழங்கிணை நன்றாக நசுக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு உறங்க வேண்டும்.

ரத்த அழுத்தமானது குணமாக

ஊட்டச்சத்து அற்ற உணவு சாப்பிடுபவர்களுக்கு, மன அழுத்தம் அதிகம் உள்ளவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு, மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த அழுத்த பிரச்சைனை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்த உருளைக்கிழங்கில் நார்ச்சத்தும், பொட்டாசியமும் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே இது ரத்தத்தில் இருக்க கூடிய கொலஸ்டராலின் அளவினை குறைக்க உதவுகின்றது.

மேலும் இந்த பொட்டாசியம் சத்தானது நமது உடலில் ஓடக்கூடிய ரத்தத்தில் பிராணவாயு கிரகிக்கும் ஆற்றலினை அதிகரிக்கிறது. இதன் மூலமாக இரத்த அழுத்தம் குறையும்.

ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக்கிழங்கினை சரியான விகிதத்தில் சாப்பிட்டு வருவது நல்லது.

கீழ்வாதம் குணமாகும்

அவித்த உருளைக்கிழங்குகளின் தோள்களை சேகரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு இந்த கசாயத்தை அருந்தினாலும் கீழ்வாதம் குணமாகும்.

மூளை செயல்திறனை அதிகரிக்கும்

மூளையின் நல்ல செயல்பாட்டிற்கு தேவையென்ன குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸ்சிஜன் வரத்து அதிகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் வைட்டமின் பி சில வகைகள் சில ஹார்மோன்கள் உள்ளன.

அமினோ அமிலம் மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.

உருளைக்கிழங்கு மேற்கூறப்பட்டஅ னைத்தும் இதில் உள்ளதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதளவில் உதவுயாக உள்ளது.

மேலும்

உருளைக் கிழங்கின் சாறை எரிக் காயம் , சிராய்ப்புகள் , சூழலுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம் .

உருளைக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து அடிவயிறு வீங்குவதனையும் தடுக்கிறது.

இரைப்பைகைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதனை முன்கூட்டியே தடுக்கிறது.

அதுமட்டுமில்லாமல் அவற்றில் நச்சு நீர் தேங்குவதையும் தடுக்கிறது.

உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதியில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும் வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாக தைக்க நிவாரணம் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு சாறினை எடுத்து கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் அதாவது மூன்றில் ஒரு பங்காக வற்ற விடவும்.

பின்னர் அதனுடன் கிளிசரின் சேர்த்து இந்த தைலத்தினை ஒரு பாட்டலில் ஊற்றி அடைத்து வைத்து கொள்ளவும்.

ஊழலில் வீக்கம் மற்றும் வலி உள்ள பகுதிகளில் இரண்டோ அல்லது முன்று மணி நேரத்திற்கு ஒரு தடவை பாடலில் அடைத்து வைத்த தைலத்தை நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால் வீக்கம் குறையும் மற்றும் வலியும் நீங்கும் .

ஊட்டச்சத்து குறைவால் ஏற்படும் சொறி , கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயை குணப்படுத்தும்.

உருளைக்கிழங்கு வாய்ப்புண் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவு இருக்கும். பச்சை உருளைக்கிழங்கை அரைத்து வாய்ப்புண்களின் மேல் தடவினால் வாய்ப்புண் குணமடையும்.

தீமைகள்

ஒரு உணவு பொருள் என்றால் நன்மைகளும் இருக்கும் , தீமைகளும் இருக்கும் .

வயிற்றுப் போக்கினால் அவதிப்படுவர்களுக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும்.

ஏனென்றால் இதில் சுலபமாக செரிமானம் ஆகிவிடும் ஆற்றல் இருக்கிறது.

இருப்பினும் இதை அதிகமாக உட்கொண்டால் அதிக அளவு ஸ்டார்ச் உடலில் உள்ளே செல்வதால் வயிற்றுப்போக்கு அதிகரிக்க செய்யும் . ஆனால் கவனமாக இருப்பது நல்லது.

அதே போல உருளைக்கிழங்கில் ஒரு சில பாகங்கள் தீமை விளைவிக்கக் கூடியது .

உருளைக் கிழங்கின் இலைகள் மற்றும் பழங்கள் நமது உலகிற்கு உபாதையை விளைவிக்கக் கூடியது .

அதில் ஓலநைன் சகோனைன் மற்றும் ஆசனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால் அதிக அளவு உடலுள் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும் .

அது மட்டும் இல்லாமல் , குளுகோஸ் அளவை அதிகரிக்க செய்வதால், உருளைக்கிழங்கு பருமனாக இருப்பவர்களும் சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

ஆகவே நல்ல உணவு பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள் . நோயற்ற வாழ்வை வாழுங்கள்……

மிளகு எவ்வளவு நன்மைகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் Click Here 

இதனையும் படிக்கலாமே

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)

பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)

முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)

அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)

 

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை படிக்கவும்

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning