உடல் நலம் காப்போம் | Udal Nalam Kurippugal in Tamil

உடல் நலம் காப்போம் | Udal Nalam Kurippugal in Tamil

இன்று, நாம் சந்திக்கும் பல உடல்நல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நம்முடைய இன்றைய உணவுமுறை மற்றும் உடல் உழைப்பு என்பது அறவே இல்லாமல் போனதுதான்.

நம் முன்னோர்கள் எல்லாம் எங்கு செல்வதாக இருந்தாலும் நடந்தே செல்வார்கள். எனவே ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்.

ஆனால் இன்றோ அப்படி அல்ல இன்று எங்கு செல்வதாக இருந்தாலும் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துகிறோம்.

நடைப்பயிற்சி

நடைப்பழக்கம் என்பது முற்றும் மறந்து போய்விட்டது என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் இன்றைய அவசர யுகத்தில் இது இரண்டும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. இதன் விளைவுதான் நோய்கள்.

இன்னும் சொல்லப் போனால் இன்று அதிகரித்து வரும் சர்க்கரை நோய்க்கு, முக்கிய காரணம் உணவும், உடற்பயிற்சி இல்லாமைதான்.

அப்படி என்றால் இதற்கு என்னதான் வழி என்றால் நிச்சயம் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வதுதான்.

உண்மையில் நம்முடைய அனைத்து உடல்நலப் பிரச்சனைகளையும் நடைப்பயிற்சி கொண்டே சரி செய்து கொள்ள முடியும்.

தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தாலே போதும். பல நோய்களை வராமல் தடுக்கவும் முடியும்.

செரிமான மண்டலம்

உடல் நலத்தை மேம்படுத்த முடியும். முடியும். தினமும், ஒரு அரை மணி நேரம், நடைபயிற்சி செய்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிக்கலாம்.

இரைப்பையில் சுரக்கும் செரிமான அமிலத்தின் அளவை இது அதிகரிக்க உதவும். இதனால் நாம் சாப்பிடு உணவுகள் சரியாக செரிமானம் அடைவதோடு வளர்சிதை மாற்றம் விகிதமும் அதிகரிக்கும்.

health tips in tamil for man

மலசிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனையே வராமல் தடுக்கலாம். நம் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறினாலே நம் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

எனவே, நடைப்பயிற்சி அஜீரணக் கோளாறை தடுப்பதோடு மற்ற பிரச்சனைகள் ஏற்படாமலும் தடுக்கும்.

எலும்பு பலம்

நாம் தினமும் நடைப்பயிற்சி செய்தால் எலும்புகள் பலம் பெற்று வலிமையாக இருக்கும். அதிலும் சூரிய வெளிச்சம் உடலில் படும்படி நடைபயிற்சி மேற்கொண்டால் அது உடலில் வைட்டமின் டி உற்பத்தி ஊக்குவித்து உடலால் கால்சியம் உறிஞ்சும் அளவை அதிகரிக்கும்.

நடைப்பயிற்சி செய்வதால் மூட்டுகள் வறட்சி அடைவதை தடுத்து,கீழ்வாதம் வரும் அபாயத்தையும், குறைக்க முடியும்.

 

மூச்சு பிரச்சனை

மூச்சு பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் நடைபயிற்சி கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் ஒரு அரை மணி நேரம் செய்வதால் இதயம் பலமடைகிறது.

மேலும் மூச்சுக்குழல் சீராக செயல்படுகிறது. உண்மையில் இளம் வயதிலிருந்து நடைபயிற்சி மேற்கொள்பவர்களின் இதயம் முதிர்ந்த வயதிலும் ஆரோக்கியமாக இயங்குவதாக அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

தசை வடிவம்

நடைப்பயிற்சியை மேற்கொண்டால் நமது தசைகள் நல்ல வடிவத்தையும் பெறும். அதே போன்று, வியர்க்க, வேர்க்க உடற்பயிற்சி செய்யாமலே கைகள் தொடைகள் மற்றும் பிட்ட பகுதிகளை நல்ல வடிவத்துடன் வைத்து கொண்டு உடல் நலத்தை மேம்படுத்த முடியும்.

வலிமையான நோய் எதிர்ப்பு மண்டலம்

நடைப்பயிற்சியின் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலமும் வலிமை அடையும். நமது நோய் எதிர்ப்பு மண்டலம், வலிமையாக இருந்தால்தான் நம்மை சுற்றி உள்ள கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி பெற முடியும்.

health tips in tamil

மூளை செயல்பாடு

நடைபயிற்சி நமது மூளை செல்களின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். மேலும் மூளை திசுக்களின் அளவு குறைவதை தடுத்து நினைவாற்றல் இழப்பு மற்றும் முதுமையில் வரும் demand shape போன்ற அபாயத்தையும் தடுக்கும்.

மனஅழுத்தம்

தினமும் ஒரு அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதோடு நோயின் தாக்கமும் தடுக்கப்படும்.

முக்கியமாக தினமும் நடைப்பயிற்சி செய்வதால் நமது மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். பெரும்பாலான நாடுகளில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வியல் பயிற்சிகளில் நடைப்பழக்கமும் கொடுக்கப்படுகிறது.

உண்மையில் ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளவர்கள் நடைபயிற்சி செய்வது அவர்களின் இதயத்திற்கு மிகச் சிறந்தது.

மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நூறு சதவீதம் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. எனவே தினமும் நடைபயிற்சி செய்வது நல்லது.

அதே போன்று மனதளவில் மட்டுமின்றி உடல் அளவிலும் ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக இருக்க தினமும் நடைபயிற்சி அவசியம்.

ரத்த ஓட்டம் அதிகரிக்க

இந்த நடைபயிற்சி நமது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவே அதிகரிக்கும். ஒருவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகம் இருந்தால் அவர்களது உடலில் ஆற்றல் அதிகம் இருக்கும்.

அதே போன்று,தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டால் ஆழ்ந்த உறக்கத்தைப் பெற முடியும்.

உடலில் உள்ள நச்சுக்கள்

இந்த நடைப்பயிற்சியால் நமது தசைகள் நன்றாக இயங்க ஆரம்பிப்பதால் உடல் இருந்து நச்சுகள் வெளியேற ஆரம்பித்து விடும்.

இதனால், உடல் சுறுசுறுப்பாக செயல்பட ஆரம்பித்து முறையான குடல் இயக்கம் நடைபெறும்.

இதனால், உடலில் இருந்து நச்சுகள் வெளியேறி, உடல் தானாக நன்கு செயல்பட ஆரம்பித்து விடும்

உடல் எடைக்கு

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு கட்டுப்பாட்டோடு தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரம் நடைபயிற்சி செய்தால் நிச்சயம் உடல் எடையை குறைத்து  உடல் நலத்தை மேம்படுத்த முடியும். .

சர்க்கரை நோய்

சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் வருவதல்ல இந்த சர்க்கரை நோய். உண்மையில் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதே முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

உண்மையில் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க தினமும் முப்பதிலிருந்து நாற்பது நிமிடம் வரை நடைபயிற்சி செய்வது கட்டாயம்.

முக்கிய குறிப்பு

உண்மையில் நம் உடல் என்னும் சாதனத்தை பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் அது துருப்பிடித்து, நோய்களுக்கு வழி வகுக்கும்.

சொல்லப் போனால் நம்முடைய மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் என, நமது உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்க இடைவிடாமல் ஓடிக்கொண்டேதான் உள்ளது.

ஆனால் இவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கும் நாம்தான் ஓடாமல், நடக்காமல், உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அப்படியே உட்கார்ந்து கிடக்கிறோம்.

பொதுவாக நடைபயிற்சி செய்ய காலை நேரமே உகந்து. காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்துவிட்டு தண்ணீர் அருந்தி இறுக்கமில்லாத ஆடை அணிந்து கொண்டு நடைபயிற்சி செய்யலாம்.

நடை ஒரே சீராக இருக்க வேண்டும். காலையில் செய்ய இயலாதவர்கள் மாலையிலும் செய்யலாம்.

உண்மையில் இதுவரை நடைபயிற்சி செய்யாதவர்கள் ஒரு மாதம் செய்து பாருங்கள் நல்ல மாற்றங்களை கண்கூடாக காண முடியும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning