முகத்தில் உள்ள தழும்பு மறைய | Thalumbu Remove Cream
பொதுவாக நம்முடைய முகம் பளிச்சென்று இருந்தால் நமக்கு இயல்பாகவே ஒரு தன்னம்பிக்கை வந்துவிடும். கரும்புள்ளிகள், தீயினால் ஏற்பட்ட தழும்பு, பருக்கள் இவை எல்லாம் முகத்தின் அழகை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் பார்ப்போரையும் முகம் சுளிக்க வைக்கும்.
இவற்றைப் போக்கி முகம் பொலிவுடன் திகழ சில வீட்டு வைத்தியங்களை பற்றி பார்ப்போம்
கற்றாழை
கற்றாழையின் ஜெல் எடுத்துக் கொண்டு கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தினமும் தடவி மசாஜ் செய்து வந்தோமானால் கரும்புள்ளிகள் மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.
இரண்டு வாரங்களில் நல்ல மாற்றம் தெரியும்.
வேப்பிலை
வேப்பிலையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரில் ஆவி பிடித்து முகத்தை நல்ல சுத்தமான துணியால் ஒத்தி எடுக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோமானால், கரும்புள்ளிகள் மறைந்துவிடும். இந்த சிகிச்சையை வாரம் இருமுறை செய்ய வேண்டும்.
கடலை மாவு
கடலை மாவுடன் பால் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி ஒரு இருபது நிமிடம் கழித்து கழுவினால் இயற்கையாகவே கரும்புள்ளிகள் போய்விடும்.
பாதம் பருப்பு
பாதாம் பருப்பை இரவில் படுக்கும் போது பாலில் ஊற வைத்து காலையில் எழுந்து மை போல அரைத்து முகத்தில் தடவி கையால் மென்மையாக மசாஜ் செய்து அலச வேண்டும்.
இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவதோடு மட்டுமல்லாமல் சருமத்தையும் மென்மையாக்கும். மேலும் வெயிலால் சருமம் கருமை அடைவதை தடுக்கும்.
ஐந்து நிமிடம் மசாஜ் செய்து பின் ஆவி பிடித்து ஈரமான துணியால் தேய்த்தால் கரும்புள்ளிகள் எளிதில் நீங்கி விடும்.
ஜாதிக்காய்
முகப்பருவை கிள்ளுவதால் ஏற்படும் கரும்புள்ளியை போக்க ஜாதிக்காய் ஒன்றை எடுத்து தேங்காய்ப்பால் சிறிது விட்டு அரைத்து இரவில் கரும்புள்ளியின் மேல் மசாஜ் செய்ய வேண்டும்.
காலையில் எழுந்ததும் முகத்தை நன்கு கழுவ வேண்டும். தினமும் இது போல் செய்து வர சில நாட்களிலேயே கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
அரசமர பழுப்பு இலை
முகத்தில் தழும்புகள் மற்றும் தீ புண்ணால் ஏற்பட்ட தழும்புகள் மறைய அரசமர பழுப்பு இலைகளை எரித்து கறியாக்கி தூள் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இவற்றை, தேங்காய் எண்ணெயில் குழைத்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவி வந்தோமானால் தழும்புகள் படிப்படியாக மறைவதை கண்கூடாக பார்க்கலாம்.
இதனையும் படிக்கலாமே
- சிறுகீரை பயன்கள் | Siru Keerai Benefits
- புளி மருத்துவ பயன்கள் | Tamarind Medical Benefits
- பிரண்டை மருத்துவ குணங்கள் | Pirandai Benefits in Tamil
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- கொத்தவரங்காய் பயன்கள் | Kothavarangai in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
21 Comments
Comments are closed.