மீல் மேக்கர் நன்மை தீமைகள்

மீல் மேக்கர் நன்மை தீமைகள்

சமீபகாலமாக சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இந்த மீல்  மேக்கர். ஆனால் பலருக்கும் இது எதில் இருந்து கிடைக்கிறது. இது உடலுக்கு நல்லதா, கெட்டதா என்பது கூட தெரியாது.

இதன் சுவை இறைச்சியின் சுவை போன்றே இருப்பதால், நிறைய பேர் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதை எலும்பு இல்லாத இறைச்சி என்றும் கூறப்படுகிறது.

அப்படி என்றால் இறைச்சியில் கிடைக்கும் அத்தனை சத்துகளும் இதில் கிடைக்குமா என்ற கேள்வி உங்களுக்கும் வரும்.

இது உடலுக்கு நன்மைகள் தருமா? ஆண்கள் சாப்பிடக் கூடாது என்கிறார்களே இது உண்மையா? இது போன்ற மீள்மேக்கர் பற்றிய தகவல்களை பாப்போம்.

மீல்  மேக்கர் எதில் இருந்து கிடைக்கிறது?

இது சோயா பீன்ஸ் என்ற பருப்பு வகையில் இருந்து கிடைக்கிறது.

அதாவது எப்படி நிலக்கடலையை செக்கில் கொண்டு எண்ணெய் தனியாக புண்ணாக்கு தனியாக பிரிக்கப் படுதோ அதே போன்ற முறை தான் இதுவும்.

இந்த சோயா சக்கை தான் இறைச்சி துண்டுகள் போன்று இருப்பதற்காக சிறு சிறு துண்டுகளாக வெட்டி பாக்கெட்டில் அடைத்து மீள்மேக்கர் என்ற பெயரில் விற்பனை செய்கிறார்கள்.

உண்மையில் மீல் மேக்கர் என்ற பெயர் இதை முதல்முதலில் தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்தின் பெயராகும்.

அதிகளவு புரோட்டின்

உண்மையில் இறைச்சிக்கு நிகரான சைவ உணவில் முதலிடம் இந்த சோயாவுக்குத்தான் உள்ளது.

இதில் புரோட்டின் மிக அதிகமாக உள்ளது. தானிய வகைகளிலேயே சோயாவில் தான் புரோட்டின் அதிகமாக உள்ளது.

நூறு கிராம் சோயா வில் நாற்பத்தி மூன்று கிராம் புரோட்டின் உள்ளது. உடல் வளர்ச்சிக்கு பிரதமை அடிப்படை உடலில் புதிய திசுக்களை கட்டமைக்கவும், அழிந்த திசுக்களுக்கு பதிலாக புதிய திசுக்களை உருவாக்கவும் புரோட்டின் மிக அவசியம்.

ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாளைக்கு ஒவ்வொரு கிலோகிராம் எடைக்கும் ஒரு கிராம் என்ற விகிதத்தில் புரோட்டின் தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

soybean benefits and side effects in tamil

இறைச்சிக்கு மாற்று உன் உணவு

இந்த சைவ உணவான சோயா உணவிலிருந்து நமக்கு தேவையான புரோட்டின் அதிக அளவு கிடைக்கிறது.

இந்தப் புரதத்தில் நம் உடலுக்கு அடிப்படை தேவையான அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளது.

இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக் கொள்ள முடியாது. முக்கியமாக, கடல் மீன்களில் காணப்படும் அமினோ அமிலம் ஆன ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது சைவ உணவான இதில் அதிகம் உள்ளது.

இது உடலுக்கு மிகவும் முக்கியமானது. எனவே, இதை இறைச்சி உணவுகளுக்கு சிறந்த மாற்று உணவு என்று சொல்லலாம்.

எனவே, இறைச்சி பிடிக்காதவர்கள், நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த மீள்மேக்கரைப் சாப்பிடலாம்.

இதனால், இறைச்சியில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்தும் இதிலிருந்து பெற முடியும்.

சோயாவிலுள்ள கிடைக்கக்கூடிய சோயா பால், சோயா சீஸ், சோயா எண்ணெய் இவற்றிலும் புரதசத்து அதிகமாக உள்ளது.

இறைச்சி போல் இல்லாமல், சோயா வில் கொழுப்பு சத்து குறைவாகவே இருக்கும். முக்கியமாக, கார்போஹைடிரேட் அளவு மிக மிகக் குறைவு.

எனவே, இது உடலுக்கு நன்மை தரக் கூடியது.

இதய ஆரோக்கியம்

இதயத்தின் சக்தியை கூட்டுவதில் சோயா அபாரமாக செயல்படுகிறது.

இது இரத்தக் குழாய்களின் இலகு தன்மை அதிகரித்துக் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

மேலும், இதில் இயற்கையாகவே உள்ள அன்டிஆக்ஸடன்ட் வைடமன் ஏ லெஸன் போன்றவை கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, இதயத்தை பாதுகாக்கிறது.

பெண்களுக்கு உகந்தது

சோயா பீன்ஸ் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சிறப்பை அதிகரிப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.

இதனால் மெனோ பாக்ஸ் பிரச்சனைகள் தடுக்கும் ஆற்றல் சோயாவிற்கு உண்டு.

அதாவது மெனோ பாக்ஸ் நின்றவுடன் ஈஸ்ட்ரோஜன் சுரப்பது நின்று விடும். இதனால் பெண்களுக்கு எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்றவை ஏற்படக்கூடும்.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு அதிகரிக்கும் தன்மை சோயா பீன்ஸ்க்கு உள்ளது.

ஆகவே இந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க சோயா உணவுகளை எடுத்து வருவது நல்லது.

அதே போன்று மார்பகம் சிறிதாக இருக்கும் பெண்கள் சோயா பீன்ஸ் உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மார்பகம் பெரிதாகும்.

ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது.

புற்றுநோய் தடுக்க

சோனியா பீன்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகள் புற்றுநோயை தடுக்க மிகவும் உதவுகிறது.

ஐசோபிலோமோன் என்பதே பைட்டோ ஈஸ்ட்ரோஜனின் ஒரு வகை. இது சோயா புரதத்தில் அதிகம் உள்ளது.

புற்றுநோய் தடுப்பிற்கு,ஐசோபிலோமோன் மிகவும் உதவியாக இருக்கும். எனவே இது புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்ககிறது.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடலாமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் வரும்.

இதில் உள்ள அதிக நார்ச்சத்து, சர்க்கரையை கட்டுக்குள்ள வைக்கும்.ஆகவே சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆண் மலட்டுத்தன்மை

ஆண்கள் இதை சாப்பிடலாமா? கூடாதா? என்ற சந்தேகம் எல்லாருக்கும் உள்ளது. சோயா பீன்ஸ் இல் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்கிறது.

இந்த ஹார்மோன்கள் பெண்களுக்கு அதிகம் தேவைப்படக்கூடிய ஹார்மோன் ஆகும். இது

ஆண்களின் உடலில் அதிகம் சேர்ந்தால், ஹார்மோன்களின் சமநிலை மாறி, விந்தணுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

எனவே இதனால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்றும் கூறப்படுகிறது.

எனவே, ஆண்கள் மீல் மேக்கர் உணவுகளை தொடர்ந்து அதிகமாக சாப்பிடாமல், சீரான இடைவெளி விட்டு சமைத்து சாப்பிட்டால் இது பல நன்மைகளையும்கொடுக்கும்.

இதனையும் படிக்கலாமே

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)

English Overview

Here We have soybean benefits and side effects in tamil . Its also called மருத்துவம் or சித்த வைத்தியம் or பாட்டி வைத்தியம் or இயற்கை வைத்தியம் or இயற்கை உணவு or  health tips or health in tamil or tamil health tips or மூலிகை மருத்துவம் or நோயின்றி வாழ or மீல் மேக்கர் நன்மைகள் மற்றும் தீமைகள் or  மீல் யாரெல்லாம் சாப்பிட கூடாது? or மீல் மேக்கர் நன்மைகள் or மீல் மேக்கர் எதிலிருந்து கிடைக்கிறது? or source of meal maker or மீல் மேக்கர் நன்மையா ? தீமையா? or meal maker கட்டாயம் யார் சாப்பிட வேண்டும்? or ஆண்கள் மீல் மேக்கர் சாப்பிடலாமா? கூடாதா? or மீல் மேக்கர் தீமைகள் or மீல் மேக்கர் online or சோயா பீன்ஸ் பயன்கள் or சோயா பீன்ஸ் பயன்கள் or சோயா பீன்ஸ் தீமைகள் or சோயா பீன்ஸ் நன்மைகள் or சோயா பீன்ஸ் மருத்துவகுணங்கள் or soybean uses in tamil or soybean uses and benefits or soybean nanmaigal or soybean in tamil or மீல் மேக்கர் online or மீல் மேக்கர் நன்மைகள் or benefits of soybean in tamil or how to cultivate soybean in india or is soybean grown in tamilnadu or soybean advantages and disadvantages in tamil or soybean benefits and side effects in tamil or soybean benefits for hair in tamil or soybean benefits tamil or soybean in tamil nadu or soybean oil in tamil or meal maker benefits in tamil meal maker uses in tamil or meal maker nanmaigal or meal maker payangal

Related Posts

4 Comments

  1. Pingback: 4-ACO DMT
  2. Pingback: look at these guys
  3. Pingback: sex girldie

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning