எண்ணெய் குளியல் நன்மைகள் | Oil Bath Benefits in Tamil

எண்ணெய் குளியல் நன்மைகள் | Oil Bath Benefits in Tamil

நோய்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதற்கு நம் பாரம்பரிய பழக்கங்களை மறந்து போனதும் ஒரு காரணம். அந்த வகையில், எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் என்பது இப்பொழுது, தீபாவளிக்கு மட்டுமே என்ற நிலை உள்ளது.

அதிலும் சாஸ்திரத்திற்கு என்று ஒரு தேக்கரண்டி வைத்து குளிப்பவர்களும் உண்டு. உண்மையில் இதனால் நமக்கு எவ்வளவு நன்மைகள் என்று நாம் உணர்வதில்லை.

இன்று பல நோய்களுக்கு காரணமே எண்ணெய் தேய்த்து குளிக்காமல் இருப்பதுதான். பெரியவர்கள் இதன் நன்மைகளை எடுத்து சொன்னாலும் இளைய சமுதாயம் காதில் வாங்குவதில்லை. எண்ணெய் தேய்த்து குளிப்பதால், என்னதான் நன்மைகள்? எப்படி குளிக்க வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதிலை தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் குளியல் நன்மைகள்

சருமம்

இன்றைக்கு சுற்றுச்சூழல் மாசு என்பது அதிகரித்துவிட்டது. இதனால் வெளியிலிருந்து வந்து குவியும் தூசு, தோலின் மீது படிந்துவிடும். இந்த தூசி எல்லாமே, தண்ணீரில் கரைவதில்லை. Soap போட்டு குளிப்பது, வெளிப்புற அழுக்கை போக்குமே தவிர சருமத்தின் உள் ஊடுருவி அழுக்கு தூசியை போக்காது.

அழுக்கு அப்படியே படிந்து அழகை குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த வகை தூசுக்கள் கண்ணுக்கும் தெரியாது. இதற்கு வாரம் ஒரு முறையாவது, எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம்.

வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற, சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். மேலும் இதனால் சருமம் நல்ல பொலிவைப் பெறும். மன அமைதி கிடைக்கும். கண்ணும், உடலும் குளிர்ச்சி அடையும். பேன், புடு தொல்லை இருக்காது. முடி நன்றாக வளரும். தலையில் வழுக்கை விழாது.

எப்பொழுதும் ஒரு வித புத்துணர்ச்சி இருக்கும். சரும வளர்ச்சி நீங்கும்.

oil bath ingredients in tamil

உடல் குளிர்ச்சி

அடிக்கும் வெயிலுக்கு சூட்டு உடம்பு உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. இதனால் உடலில் இருக்கும் உஷ்ணமானது வெளியேறி விடும். அதனால்தான் எண்ணெய் தேய்த்து குளித்த அன்று உடல் சூடாகவே இருக்கும். இதை உடல் சூட்டை கிளப்பி விட்டுடுச்சு என்று பலரும் எண்ணெய் தேய்த்து குளிக்காமல் இருந்து விடுவார்கள்.

உண்மையில் உடலில் உள் உறுப்புகள் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் தான் இப்படி இருக்கும். அதே போன்று கண்களில் ஏற்படும் எரிச்சல் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் இல்லாமல் போய்விடும்.

மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பை போக்கும். கண்கள் பொங்குவது நின்றுவிடும். தலையும், கண்களும் குளிர்ச்சி அடையும்.

oil bath days in tamil

மூட்டு வலி

உடல் சோர்வு, உடல் வலி நீங்கும். நன்றாக தூக்கம் வரும். மூட்டு வலி, உடல் வலிக்கு நல்லெண்ணெயை மிதமான சூட்டில் தினமும் தடவி வந்தால், இலந்தை நீர் மற்றும் எண்ணெய்ப்பசை மூட்டுகளில் சேர்ந்து, வலி மூட்டுகள் பலப்படவும் உதவும்.

பொதுவாக osteoporosis, வாதம், மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் ஆயில் மாசாஜ் செய்து குளிப்பது நல்லது.

மேலும்

பொதுவாக சருமத்தில் எண்ணெய் பசை இருந்தால்தான் சூரியனில் இருந்து வரும் vitamin D சத்தை உடல் கிரகிக்கும்.

மேலும், உடலின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் எண்ணெயை உடல் முழுவதும் தடவி மஜாஜ் செய்யும் பொழுது நிணநீர் சுரப்பிகள், சுறுசுறுப்பாக செயல்படும்.

வயிற்றுப் பகுதியில் மஜாஜ் செய்வதால் செரிமான மண்டலம் தூண்டப்படுவதுடன் வயிற்றில் காணப்படும் கழிவுகளும் நன்கு வெளியேறும்.

மேலும், கல்லீரலின் ஆற்றல் அதிகரிப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, நல்லெண்ணையோடு பூண்டு செவப்பு மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி தாங்கும் சூட்டில் பயன்படுத்த வேண்டும்.

oil bath days and benefits in tamil

இதனை, மொத்தமாக காய்ச்சி வைத்தும், பயன்படுத்தலாம். எண்ணெய் தேய்த்த உடனே குடிக்கக் கூடாது. பதினைந்திலிருந்து முப்பது நிமிடத்திற்கு பிறகு இளம் சூடான தண்ணீரில் குளிக்கலாம். முக்கியமாக, எண்ணெய் குளியலின் பொழுது தலைக்கு சீயக்காயும் உடலுக்கு பாசிப்பருப்பு மாவு நல்லது.

பாசிப்பருப்பு உடலில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி சருமத்திற்கு பொலிவைத் தரும். சீயக்காய் தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்குவதோடு முடி உதிர்வு, இளநரையைத் தடுத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

நிறைய பேருக்கு உள்ள சந்தேகம் மற்ற எண்ணெய்களைத் தேய்த்துக் குடிக்கலாமா? என்று. பொதுவாக, தமிழ்நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு நல்லெண்ணெய்யே சிறந்தது. இதில்,கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மற்றும், இரும்புச் சத்து, ஏராளமாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல், நல்லெண்ணெயில் உள்ள vitamin E முடி சிதைவைத் தடுக்கும். மேலும், இது, உடலில் வாதத்தை குறைத்து சீராக வைத்துக் கொள்ள உதவும்.

மேலும், ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், தேய்த்துக் குடிக்க வேண்டும்.

உண்மையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது நமது உடலையும், உள்ளத்தையும் எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

ஆகவே இனி இதுவரை இல்லை என்றாலும் இனி வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனையம் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயாமாகா படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning