கொய்யா இலை பயன்கள் | Koyya Ilai Benefits in Tamil
கொய்யா மரத்தின் இலை, பழம், வேர், பட்டை என அனைத்து பகுதிகளும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கொய்யாப் பழங்களை உட்கொள்ளும் அளவிற்கு அதன் இலைகளை நாம் அதிகம் பயன்படுத்துவது இல்லை.
கொய்யா இலைகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.
கொய்யா இலைகளில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம் பொட்டாசியம் சோடியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம்,வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் உயர்தரமான ஆன்டி ஆக்ஸிடென்ட் குணங்களும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளன.
கொய்யா இலைகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் சிறந்த பத்து நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
வயிற்று புண்
கொழுந்தாக இருக்கும் கொய்யா இலைகளை ஐந்து அல்லது ஆறு எண்ணிக்கையில் எடுத்து ஒன்றிரண்டாக நறுக்கி இரண்டு டம்பளர் நீர் ஊற்றி கொதிக்க வைத்து பாதியாக வற்றியதும் மிதமான சூட்டில் தேன் கலந்து காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து அருந்தி வந்தால் வயிற்றுப் புண் குடற்புண்கள் ஆறி வரும்.
வயிற்றுப் போக்கு
வயிற்றுப் போக்கு இருக்கும் பொழுது இந்த கஷாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு கட்டுப்படும்.
செரிமான கோளாறுகளை சரி செய்யும் தன்மையும், குடலில் வாழும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கும் தன்மையும் இந்த கொய்யா இலை கஷாயத்திற்கு உண்டு.
தொண்டை வலி
கொய்யா இலை கஷாயத்தை அருந்தி வரும் பொழுது தொண்டைப்புண், தொண்டையில் ஏற்படும் கிருமி தொற்று, தொண்டை வலி இருமல் பிரச்சனை குணமாகும்.
மேலும், கொய்யா இலை கஷாயம் தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகளையும் சரி செய்ய உதவும்.
உடல் உபாதைகள்
கொய்யா இலையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் வைட்டமின் சி சத்துக்களும் உடலில் அடிக்கடி ஏற்படும் சளி, காய்ச்சல் போன்ற நோய் தொற்றுக்களை தடுக்கும்.
காய்ச்சல் இருக்கும் சமயங்களில் கொய்யா இலைகளுடன் மஞ்சள், மிளகு, துளசி போன்றவற்றை சேர்த்து கஷாயம் செய்து அருந்தி வருவதன் மூலம் காய்ச்சல் கட்டுப்படும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
பெண்கள் ஆரோக்கியம்
கொய்யா இலை கஷாயத்தை பெண்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக ரத்த போக்கு, கடுமையான வயிற்று வலி குறையும். உடற்சோர்வு, உடல் வலி நீங்கும். கருப்பை பலம் பெறும்.
சர்க்கரை
ஆறு அல்லது ஏழு கொய்யா இலைகளுடன் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து கஷாயம் செய்து காலை வெறும் வயிற்றில் அருந்தி வருவதன் மூலம் அதிக ரத்த சர்க்கரை அளவு குறைந்து கட்டுப்படும்.
கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உறுப்புக்களின் செயல்பாடு அதிகரிக்கும். இவ்வுறுப்புகள் பலமடையும்.
உடல் எடை
கொய்யா இலைகள் மற்றும் சீரகம் சேர்த்த கஷாயத்தை தொடர்ந்து அருந்தி வரும் பொழுது உடலில் தேங்கி இருக்கும் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றி நல்ல கொழுப்புக்களின் அளவை தக்க வைக்கும்.
உடல் பருமன் இருப்பவர்கள் இந்த கஷாயத்தினை அருந்தி வந்தால் உடல் எடை படிப்படியாக குறையும்.
இதய ஆரோக்கியம்
கொய்யா இலை கஷாயத்தை தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
இரத்த குழாய்களில் அடைப்புகள் உருவாவதை தடுப்பதால் இதயம் தொடர்பான நோய்கள் வருவதை தடுக்க உதவும்.
சரும ஆரோக்கியம்
சருமத்தில் சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும் மருத்துவ குணம் கொய்யா இலைகளில் உள்ளன.
கொய்யா இலை கஷாயத்தை அடிக்கடி அருந்தி வந்தால் சரும செல்கள் புதுப்பிக்கப்படும்.
சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.
தலைமுடி
கொய்யா இலைச் சாற்றை வாரம் இருமுறை தலை முழுவதும் நன்கு முடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலை குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கி விடும்.
இளநரை வருவதைத் தடுக்கும். வெள்ளை முடியை படிப்படியாக கருமையடையச் செய்யும். தலைமுடியும் நன்கு அடர்த்தியாக வளர உதவும்.
வாய்ப்புண்
கொழுந்தாக இருக்கும் இரண்டு கொய்யா இலைகளை நன்கு மென்று அதன் சாற்றை விழுங்கி வந்தால், வாய்ப்புண் குணமாகும். தினமும் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ஈறு வீக்கம், ஈறு வலி குணமாகும். பற்கள் வலுவடையும்.
புற்றுநோய்
புற்றுநோயை எதிர்து போராடும் மருத்துவப் பண்புகள் கொய்யா இலைகளில் நிறைந்துள்ளன. கொய்யா இலை கஷாயத்தை அருந்தி வரும் பொழுது உடலில் புற்றுநோய் செல்கள் பெருகுவதைத் தடுக்கும்.
புற்றுநோய் காரணிகளை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.
இது போன்ற இன்னும் பல நன்மைகளை அளிக்கும் கொய்யா இலைகளை பயன்படுத்தி வருவதன் மூலம் நமக்கு நாமே உடலில் ஏற்படும் பல நோய்களை சரி செய்ய முடியும்.
இதனையும் படிக்கலாமே
- பாதாமில் உள்ள சத்துக்கள்
- கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
- தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா
- பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil
- உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil
- சுண்டலின் நன்மைகள் |Benefits of Chives
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்