கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் | Benefits of Karisalankanni in Tamil
உணவாகவும் மருந்தாகவும் பயன்படக்கூடிய கீரைகள் வரிசையில் முன்னணியில் இருப்பது கரிசலாங்கண்ணி கீரை தான்.
அதனால் தான் சித்தர்கள் இதனை கீரைகளின் அரசி என்று அழைக்கிறார்கள்.
தலைமுடி கருமை
இந்த கீரையை உண்பதாலும் இதன் சாற்றை தலையில் தேய்ப்பதாலும் முடிக்கு கருமை வண்ணம் கொடுக்கின்றது.
உடல் எடை
எடை, உடல் பருமன், தொந்தியை குறைக்க விரும்புவோர் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு நோய்
சில வருடத்திற்கு முன்பு தமிழகத்திற்கே சவாலாக விளங்கிய டெங்கு காய்ச்சல் என்பது ஒரு உயிர் கொல்லி நோய் என்பதை அனைவரும் அறிந்ததே.
டெங்கு காய்ச்சல் பல உயிர்களைக் கொன்று குவித்தது.
உயிரிழக்க முக்கிய காரணமாக பங்கு வகித்தது பிளேட்லட்ஸ் என்று சொல்லப்படும் இரத்த தட்ட அணுக்கள் குறைந்தது தான்.
இரத்த தட்ட அணுக்களை அதிகப்படுத்த அலோபதி என்ற ஆங்கில மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லை.
ஆனால், இரத்த தட்ட அணுக்களை அதிகப்படுத்தினால் காப்பாற்ற முடியும்.
இதை ஆய்வு செய்து பரர்க்கும்பொழுது கரிசிலையின் உதவியைக் கொண்டு ஒரே நாளில் சரி செய்ய முடியும் என்று தெரிய வந்துள்ளது.
கரிசலாங்கண்ணி யில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
வெள்ளை கரிசாலை
வெள்ளை கரிசாலை உணவாகவும் எடுத்துக் கொண்டால் நல்லது.
தலைமுடி நன்கு வளர கருமையாக இருக்க இந்த வெள்ளை கரிசலாங்கண்ணி உதவுகின்றது.
இவை ஒரு இயற்கை கூந்தல் தைலம் ஆக இருக்கின்றது.
இளநரை
கரிசலாங்கண்ணி, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவர் அவர் இல்லத்தில் அனைத்தையும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் போட்டு தைலமாக காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், உடம்பில் பித்தத்தை சரி செய்து, தலை சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் மற்றும் இளநரை யையும் சரி செய்யும்.
மேலும்
இந்த கரிசலாங்கண்ணி சித்தர்கள் போற்றும் இலை என்று அழைக்கின்றனர்.
இராமலிங்க அடிகளார் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
இரத்த சோகை, காமாலை முதலியவற்றை கட்டுப்படுத்தும் .
கல்லீரல், மண்ணீரல் ஐ பலப்படுத்தும், பித்தநீர் பெருக்கி யாகவும், மலம் இலக்கியாகவும் செயல்படும்.
கரிசலாங்கண்ணி தோல் நோய்களை கட்டுப்படுத்தும். வழிப்பு மற்றும் இரத்தப் புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும் என்று சித்தர் பாடல்களில் மிகவும் தெளிவாக குறிப்புகள் உள்ளது.
இதனையும் படிக்கலாமே
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil(Opens in a new browser tab)
அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
சுண்டைக்காய் பற்றி இது வரை அறியாத மறுத்துவ பயன்களின் பட்டியல்(Opens in a new browser tab)
பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
20 Comments
Comments are closed.