சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

சப்பாத்திக்களில் அதிகமான நார்ச்சத்து உள்ளதாகவும்,புத்துணர்வு தரும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளதாகவும், நவீன ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

அதனால் சப்பாத்திக்கள்ளியை நாம் முழுவதுமாக உணவுக்கு பயன்படுத்தலாம்.

இதனுடைய இலை, பூ, பழம், தண்டு என அணைத்து பகுதியினையும் சமைத்தோ அல்லது சாறாக பிழிந்தோ உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

சப்பாத்திக்கள்ளி, வைட்டமின் சி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்களை தன்னகத்தை உள்ளடக்கி, நம் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

சப்பாத்திக்கள்ளியை ஒரு முறை நாம் உணவில் சேர்ப்பதால், நமக்கு ஒரு நாளைக்கு தேவையான வைட்டமின் சீ சத்தானது மூன்றில் ஒரு பங்கு அளவு கிடைக்கிது.

சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

தண்ணீர் சுத்திகரிக்க

சப்பாத்திக்கள்ளின் சதைப்பகுதியை பசையாக்கி, நீரில் கலந்து வைத்து பரிசோதனை செய்ததில், நீரில் கலந்திருந்த நச்சுக்கல், மாசு பொருட்கள், நுண்கிருமிகள் அனைத்தும் அடியில் தங்கி, நீர் தெளிவானதை விஞ்ஞானிகள் கண்டிருக்கின்றனர்.

இதனால், தொண்ணூத்தி எட்டு சதவீதம் அளவுக்கு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. இதுபோலவே, சிறிதளவு சப்பாத்திக்கள்ளியை நீரில் இட்டு கொதிக்க வைத்து அந்த நீரை சுத்தரிக்க வேண்டிய நீருடன் கலந்து வைப்பதால் சுத்தமான பருகத்தக்க நீர் கிடைக்கும்.

இது மிகவும் சிக்கனமான முறையில் மிக எளிதில் நீரைச் சுத்திகரிக்கும் முறையாகும்.

சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

சர்க்கரை நோய்

சப்பாத்திக்கள்ளி சத்தூட்டம் நிறைந்துள்ள உணவாக இருப்பதாகவும், இரண்டாம் நிலை சர்க்கரை நோயாளிகளின் ரத்தத்தில் சேர்ந்திருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும் என்பது சில ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

சப்பாத்திக்கள்ளியை அடிக்கடிஉணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் சிறுநீர் மற்றும் சிறுநீர்த்தாரை நோய்கள் பலவும் கட்டுப்படும்.

உடல் பலம்

சப்பாத்திக்களியை உணவாக பயன்படுத்துவதால், கொழுப்புச்சத்து குறைந்து உடல் உறுப்புகள் பலம் பெற்று, சீராக இயங்க வழி ஏற்படுகிறது.

சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

அல்சைமர் நோய்

மேலும் சப்பாத்திக்கள்ளி மறதி நோயான அல்சைமர் நோய்க்கு சிறந்த மருந்தாகவும், அல்சைமர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையை கொண்ட மருந்தாவும் பயன் தருகிறது.

செரிமானம்

சப்பாத்திக்களில் உள்ள நார்ச்சத்து சீரான செரிமானத்துக்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வகை செய்கிறது.

வயிறு உப்புசமில்லாமல் பாதுகாக்கிறது. இதனால் குடல் புண், மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் நம்மைபாதுகாக்கிறது.

சப்பாத்திக்களில் உள்ள நார்ச்சத்தானது, உடல் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற வழி செய்கிறது.

சப்பாத்திக்கள்ளி முட்களை நீக்கி சுத்திகரித்து பசையாக்கி இருபது கிராம் அளவு தினமும், இருவேளை சாப்பிட்டு வர உஷ்ணமாக மலம் வெளியேறுதல் மற்றும் மாதவிலக்கு நிற்கும் காலங்களில் ஏற்படும் பல விதமான தொல்லைகள் அனைத்தும் குணமாகும்.

இதை உள்ளுக்கு மருந்தாக பயன்படுத்துவதால் வயிற்றை நோகச் செய்து, அடிக்கடி மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வினை மாற்ற முடியும்.

சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

மாரடைப்பு

இதில் உள்ளபொட்டாசியம் சத்தானது, ரத்த ஓட்டத்தை சீர் செய்து, ரத்த அழுத்தம் அதிகமாகாமல் பாதுகாக்கிறது.

இதனால், ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு போன்ற அபாயம் தடுக்கப்படுகிறது.

புற்றுநோய்

சப்பாத்திக்கள்ளியில் அதிகாலையில் உள்ள, ஃப்ளாவனாய்டு வேதிப்பொருட்கள், உடல் தன்னிச்சையாக செயல்பட்டு புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை வெளியேற்றும் பணியில், பெரும்பங்கு வைக்கின்றன.

இதனால், புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.சப்பாத்திக்கள்ளிக்கு சில வகை புற்றுநோய்கள் வராமல் தடை செய்யும் வலிமையும் உண்டு.

சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

முதுமை

சருமத்தின் ஆரோக்கியத்திற்கும், இளமையில் ஏற்படும் முதுமையை தடுப்பதற்கும், கண்களில் பார்வை தெளிவு ஏற்படுவதற்கும், மூளையின் செயல்பாடுகள் மேம்படுவதற்கும் உதவுகின்றன.

சப்பாத்திக்கள்ளி இலைகள் மேற்பூச்சி மருந்தாகப் பயன்படும். இதைப் பசையாக்கி மேல் பற்றாக பயன்படுத்துவதால் உஷ்ணம், வீக்கம் ஆகியவை விலகும்.

சப்பாத்திக்கள்ளி பழங்களை நெருப்பிலிட்டு வதக்கி கொடுக்க கக்குவான் இருமல் குணமாகும்.

சப்பாத்திகள்ளியின் பூக்களை புதிதாகவோ அல்லது காய வைத்து உலர்த்தியோ வீக்கத்தை வற்ற செய்வதற்காகவும், ரத்தத்துக்கு உரையும் தன்மையை கொடுப்பதற்காகவும் பயன்படுத்தலாம்.

வலி நிவாரணி

குடல் பகுதியில் சேரும் சளித்தன்மையால் ஏற்படும் வலி குணமாகும்.

சப்பாத்திக்கள்ளியை பசையாக்கியு மேற்பற்றாக போட்டு வைப்பதால், மூட்டு வலி, வீக்கம் ஆகியவை குணமாகும்.

காது வலி, பல் வலி ஆகியவற்றிற்கும் இது பயனுள்ளதாய் விளங்குகிறது.

சப்பாத்திக்கள்ளியை நன்றாக பசையாக்கி அதனுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி வைத்து கொள்ளவும். அதனை வலிகள் உள்ள இடத்தில் மேற்பூச்சாக பூச விரைவில் வீக்கம் மற்றும் வலி ஆகியவை விலகும்.

அல்சர்

அல்சர் எனப்படும் குடல் புண் காரணமாக அவதிப்படுபவர்கள் சப்பாத்திக்கள்ளி நெருப்பிலிட்டு சுட்டு சாப்பிட்டு வருவதன் மூலம் குடல் புண் விரைவில் குணமடையும்.

ஆஸ்துமா

சப்பாத்திக்கள்ளியின் சதை பகுதியை எடுத்து சிறு துண்டுகளாக்கி அதனை வதக்கி சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலமாக சளி மற்றும் ஆஸ்துமா குணமாகும்.

சப்பாத்திக்கள்ளி மருத்துவகுணம் Prickly Pear Cactus Health Benefits

விஷத்தினை முறிக்க

சப்பாத்திக்கள்ளி பாம்பின் விஷத்தையும், தேள், பூரான் எலி, நாய் ஆகியவற்றின் கடி விசத்தினையும் போக்கும் மருந்தாக விளங்குகிறது.

இதனையும் படிக்கலாமே

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning