குப்பைமேனி பயன்கள் | kuppaimeni uses in tamil
மூலம், தோல் நோய்கள், நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவற்றை சரி செய்வதில் இந்த மூலிகை மிக முக்கிய பங்கு வசிக்கிறது.
சரும பிரச்சனை
தோல் நோய்கள், சொறி, சிரங்கு மற்றும் அலர்ஜி போன்றவைகளுக்கு குப்பை மேனி இலை, மஞ்சள் மற்றும் உப்பு. இவற்றை சேர்த்து அரைத்து, தோலின் மீது பூசி மூன்று மணி நேரம் வைத்து, அதன் பிறகு கழுவிவர நாள்பட்ட தோல் நோய், சொறி, சிரங்கு மற்றும் அலர்ஜி போன்றவை குணமாகும்.
மூட்டு வலி
குப்பைமேனி இலையில் சாறு எடுத்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி வடிகட்டி, மூட்டு வலி உள்ள இடத்தில் தடவிவர மூட்டு வலிகள் நீங்கும்.
முக பொலிவு
பெண்கள் குப்பைமேனி இலையை உடன் சேர்த்து, அரைத்து, முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து, முகம் கழுவி வர, முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள், மனையும், முகம் பளபளப்பாகும்.
சளி இருமல்
பத்து குப்பைமேனி இலையை, நன்கு சுத்தம் செய்து, பசும்பாலுடன் காய்ச்சி கொடுக்க உடல் ஆரோக்கியமும் மேம்படும். ஒரு கைப்பிடி அளவு எடுத்து, கஷாயமாக்கி கொடுக்க சளி மற்றும் இருமல் குணமாகும்.
விஷத்தினை பரவாமல் தடுக்க
குப்பை மேனியை நன்றாக நீரில் கொதிக்க வைத்து, பாம்பு கடித்தவர்களுக்கு, கொடுக்க விஷம் உடலில் வேகமாக பரவுவதை முடியும்.
தழும்பு ஏற்ப்படாமல் இருக்க
ஏதேனும் புண்கள் இருப்பின் குப்பைமேனி இலையை அரைத்து, பற்று போட புண்கள் விரைவில் குணமாகும். மேலும், தழும்புகள் ஏற்படுவதையும் தடுக்கும்.
வயிறு பிரச்சனை
குடல் புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு குப்பைமேனி இலையை பச்சையாகவோ அல்லது இதனை கசக்கி சாறு எடுத்து சிறிதளவு ப ருகிவர அனைத்தும் சரியாகும்.
சர்க்கரை
குப்பைமேனியின் இலைச்சாற்றை இரண்டு நாளுக்கு ஒருமுறை அருந்தி வந்தால், ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
மலேரியா குணமாக
மலேரியா காய்ச்சலுக்கு, ஆங்கில மருந்துகளை உட்கொள்ளும் பொழுது, குப்பைமேனி இலையை சேர்த்து உண்டு வந்தால் மலேரியா விரைவில் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி
குப்பைமேனி இலையை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும்.
நோய் தொற்றுகள் எளிதில் அண்டாது.
தேவையற்ற முடிகளுக்கு
குப்பைமேனி இலை, மஞ்சள் தூள், கோரைக்கிழங்கு பொட, சேர்த்து அரைத்து முகத்தில் தடவ, தேவையற்ற முடிகள் நீங்க தொடர்ந்து உபயோகிக்க வேண்டும்.
மூலம்
குப்பைமேனி இலையினை எடுத்து, காய வைத்து பொடியாக்கி, ஒரு சிட்டிகை அளவு எடுத்து, நெய் கலந்து, வேளை ஒரு மண்டலம் கொடுத்த பௌத்திரம் குணமாகும்.
மூலம், பௌத்திரம் நோய்களுக்கு, இது ஒரு சிறந்த மூலிகையாகும். குப்பைமேனியை, வேர் முதல் தளிர் வரை எடுத்து, பொடியாக்கி, நெய்யில் கிளறி, ஒரு மண்டலம் கொண்டு உண்டு வந்தால், எட்டு விதமான பௌத்திர நோயும் நீங்கும்.
மலசிக்கல்
குப்பைமேனி வேரை எடுத்து ஐநூறு மில்லி நீரில் போட்டு இருநூறு மில்லியாக காய்ச்சி குடிக்க மலச்சிக்கல் குணமாகும்.
குப்பைமேனியை, இலை உலர்த்தி, பொடியாக்கி, அரை தேக்கரண்டி எடுத்து, தேனில் கலந்து, குழந்தைகளுக்கு கொடுக்க, வயிற்றுப்புழுக்கள் மற்றும் மலவெளியேறும்.
தண்ணீர்வாதம்
குப்பைமேனி இலையை உணவாக சாப்பிட்டு வந்தால் தண்ணீர்வாதமான உடல் மதமதப்பு, கை, கால் போன்றவை குணமாக்கும்.
இதனையும் படிக்கலாமே
கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா
10 Comments
Comments are closed.