கிவி பழம் நன்மைகள் | Kiwi Fruit Benefits in Tamil
இந்த கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றாகும். இந்த கிவி பழத்தின் விலை அதிகமாக இருந்தாலும், சுவை இல்லாவிட்டாலும் இந்த பழத்தில் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக இருக்கின்றது.
கிவி பழத்தின் சுவை இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையாகும். இந்த கிவி பழம் பார்ப்பதற்கு சாப்பிட தோன்றாதது.அதே போல் இது அனைவருக்கும் பிடிக்கும் பழம் ஆகாது. ஆனால் இந்த கிவி பழம் சாப்பிட்டால் அதிகமான நன்மைகள் பெறலாம்.
கிவி பழத்தில் உள்ள சத்துக்கள்
இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் குளோரைடு, தாமிரம், அயோடின் இரும்பு சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஒன்பது கிராம் எடை கொண்ட ஒரு கிவி பழத்தில் இருபத்தி மூன்று புள்ளி நாற்பத்தாறு சதவீதம் கால்சியம் நிறைந்துள்ளது.
இந்த பழத்தில் அடங்கியுள்ள வைட்டமின்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, மற்றும், வைட்டமின் கே.
இந்த அனைத்து சத்துக்களும் உடம்பின் செயல்பாட்டிற்கு அவசியம்.
எலும்பு
இந்த கிவி பழத்தில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் தேவையான கால்சியம்
கொடுக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தி
ஒரு கிவி பழத்தில் ஆரஞ்சு பழத்தில் உள்ள அளவு வைட்டமின் சி சத்தானது இதிலும் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மேலும் இதில் உள்ள ஒமேகா மூன்று மற்றும் ஒமேகா ஆறு என்ற கொழுப்பு அமிலங்கள் உடம்பில் ஆன்டி ஆக்ஸிடென்ட்களாக நம் உடலில் செயல்படுகின்றது.
அமினோ அமிலம்
கிவி பழத்தில் உள்ள அமினோ அமிலங்கள் செல்களின் வடிவத்தை பராமரிப்பதற்கு அவசியமாக இருக்கின்றது. மேலும் உடலில் உள்ள நீர்ச்சத்தையும் மற்றும் PH அளவை கட்டுப்படுத்தும் செயல் கொண்டது.
உடலில் உள்ள நரம்பு செல்கள் மூளையுடன் தொடர்பு கொள்ளும் திறனை அமினோ அமிலங்கள் மேம்படுத்த உதவும்.
இது உடலுக்கு ஆற்றலை வழங்கக்கூடியது. இதில் உள்ள வைட்டமின் சி ஒரு நல்ல ஆன்டிஆக்ஸின்ட். இது குடல் புற்றுநோய், இதய புற்றுநோய் போன்ற வியாதிகள் வராமல் தடுக்க உதவுகின்றது.
நார்சத்து
கிவி பழத்தில் உள்ள நார்ச்சத்தானது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றது. மேலும் இந்த பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கலை அகற்றும்.
ஆஸ்துமா
இந்த பழத்தை எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா நோய் வராமல் இருக்கும். இந்த கிவி பழத்தை ஒருவர் தொடர்ச்சி சாப்பிட்டு வந்தால் மூச்சு இரைப்பு பிரச்சனை வரும் அபாயம் குறையும்.
இந்த பழம் மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவை சரி செய்து, நுரையீரலின் செயல்பாட்டிற்கு உதவுகின்றது.
கண் ஆரோக்கியம்
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளது.
வயதான காலத்தில் பார்வை இழப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கும். எனவே கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வராமல் இருக்கும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த அழுத்த சீராக வைத்துக் கொள்ள உதவும்.
இந்த பழம் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தத்தை நன்றாக ஓட செய்ய உதவுகின்றது.
உடல் எடை
இந்த கிவி பழத்தில் உள்ள கலோரிகள் மிகக் குறைவாக உள்ளது. அதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்தால் உடல் எடை குறைந்துவிடும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த கிவி பழத்தினை தாராளமாக சாப்பிடலாம். ஏனென்றால் இதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் பழத்தை எடுத்துக் கொள்வதால் ரத்த சர்க்கரை அளவு குறையும்.
இந்த கிவி பழத்தை சாப்பிடுவதால் உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். இரவில் நல்ல நிம்மதியான தூக்கம் தரும்.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
- திராட்சை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- பாதாமில் உள்ள சத்துக்கள்(Opens in a new browser tab)
- அவரைக்காய் பயன்கள் | Avarakkai in Uses Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
16 Comments
Comments are closed.