தலைமுடி உதிராமல் இருக்க | Hair Health Tips in Tamil
நம் உடல் அழகு மற்றும் முக அழகிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதைவிட ஒரு படி மேலதான் முடி அழகிற்கும் முக்கியத்துவம் தருகிறோம்.
ஏனென்றால் முக அழகை நிர்ணயிப்பதில் முடிக்கும் முக்கிய பங்கு உண்டு. ஆனால் இன்றைக்கு, ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல் பிரச்சனை மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.
இதற்கு என்ன காரணம்? என்று தெரிந்து கொண்டால் முடி கொட்டுவதை தவிர்க்க முடியும். பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் வயதாக, வயதாக முடி உதிர்தல் மற்றும் முடி வலிமை இழத்தல் என்பது இயல்பான ஒன்றுதான்.
முப்பது வயதிற்கு மேல் முடி வளர்ச்சி குறைவாகவே இருக்கும். முடியின் அடர்த்தியும் குறையத் தொடங்கும். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே முடி கொட்டி வழுக்கை விழுந்து விடுகிறது.
இன்றைக்கு படிக்கின்ற வயதில் இருக்கும் இளம் பருவத்தினர் சிலர் படிப்பில் அதிகம் கவனம் செலுத்தும் பொழுது சரியான, சரிவிகித உணவை, எடுப்பதில்லை.
அவர்கள் முடியையும் சரியாக, பராமரிப்பதில்லை. முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உடலில் குறையும் போது தானாகவே, முடி கொட்டத் துவங்கும்.
முடிக்கு இரும்புச்சத்து மற்றும் கரோட்டின் இதில் குறைபாடு ஏற்படும் பொழுது முடி கொட்டுதல், வெடித்தல், உடைதல் போன்றவை நிகழத் தொடங்கும்.
முடி கொட்டுதல் ஏற்படும் பொழுது முடிக்குத் தேவையான சத்து நிறைந்த உணவுகளை பார்த்து உண்ண வேண்டும்.
எனவே இவர்கள், தினமும் பேரிச்சம்பழம், பாதாம் பருப்பு. உலர் திராட்சை கருவேப்பிலை, அத்தி பழம், கேழ்வரகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மனஅழுத்தம்
இதனால் முடி கொட்டுவதை தவிர்க்கலாம். அதே போன்று மனாழுத்தம். பரபரப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு அதிகப்படியான முடியின் வலிமையானது குறைந்து மன அழுத்தத்தின் அளவானது அதிகரித்துவிடும். இதனாலும் முடி கொட்டும்.
பெண்களின் முடி உதிர்தலுக்கு காரணம்
பெண்களைப் பொறுத்தவரையில், தலைமுடியை, இறுக இழுத்துப் பின் கட்டுவதும், இப்படி செய்யவே கூடாது. இப்படி இறுக இழுத்து கட்டுவதால், முடியின் polycile வேர் பகுதி இழுபட்டு முடி நிரந்தரமாகவே உதிர்ந்துவிடும்.
அதே போன்று மாதாம் மாதம் periods மூலம் ரத்தப்போக்கு வெளியேறுவதால் அதை ஈடுகட்டும் அளவுக்கு உணவு சாப்பிடாமல் போகும்போது இரத்த சோகை பல பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனாலும் முடி கொட்டுகிறது.
நடு வயது பெண்களின் உடலில், ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோன் சுரப்பு குறைவதால் முடி எளிதாகக் கொட்டுவதுடன் அடர்த்தியும் குறைந்து விடுகிறது.
நோய் தொற்றினால் முடி உதிர்தல்
ரத்த சோகை மற்றும் பாக்டீரியா தொற்று ஆல் உருவாகும் நோய்கள் டைபாய்டு, மலேரியா, நிமோனியா போன்ற நேரங்களிலும் முடி உதிர்ந்து விடும். இது போன்ற நேரங்களில் சரிவிகித உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமாக தேவைப்படும் விட்டமின்கள் A, B, C மற்றும் இரும்பு சத்து கொண்ட உணவு வகைகள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.இல்லையென்றால் முடி கடுமையாக உதிர ஆரம்பிக்கும்.
முடி உதிர்தலுக்கு முக்கிய காரணங்கள்
- தைராய்டு குறைபாடு இருந்தாலும் முடி கொட்டும்.
- பொடுகு இருந்தாலும் முடி உதிரும்.
- தொடர்ந்து AC அறையில் இருப்பதாலும் முடி கொட்டும்.
- தோல் நோய்கள் இருந்தாலும் முடி கொட்டும்.
- முக்கியமாக இன்றைய இளையவர்கள் தலைமுடிக்கு அடிக்கடி இரசாயன பொருட்கள் பயன்படுத்துவதும் ஒரு காரணம்.அதாவது தலை முடிக்கு நிறமூட்டுதல் (Hair coloring), முடியை நேராக செய்வது, முடியை சுருள் சுருளாக்கும் செயல்முறை போன்றவை எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் உள்ள இரசாயனத்தினால் முடி கடுமையாக பாதிக்கப்படுகிறது.இதனால் முடியின் தன்மை பாதிக்கப்பட்டு முடி உடைந்து சிதைந்து போவதால், மற்றும் அதிகம் உதிர்கிறது.
- தினமும் முடி உலர்த்தி (Hair dryer) பயன்படுத்தினாலும் முடி விரைவில் கொட்டும்.
- Junk foods அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதால் தலையில் வழுக்கை விழ காரணமாகிறது.
- முக்கியமாக குடும்பத்தின் அப்பா அல்லது அம்மாவிற்கு முடி உதிரும் அல்லது முடி தின்னாக இருந்தாலும், முடி உதிரும். அதாவது பாரம்பரியம் காரணமாகவும் முடி கொட்டும்.
- திடீரென்று, எடை குறைதல். இரும்புச் சத்து குறைதல், முறைப்படி, உணவு முறையினை பின்பற்றாமலோ அல்லது தவறான நேரத்தில் உணவு சாப்பிடுவதனால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படலாம்.
முக்கிய குறிப்பு
பொதுவாக நமது முடி நன்றாகவும் ஆரோக்கியமாக வளர்வதற்கு ஊட்டச்சத்துகள் தேவை.
முக்கியமாக தினமும் அறுபது முதல் நூறு முடிகள் வரை உதிர்வது இயல்பே. ஆனால் அதற்கும் மேல் முடி உதிர்தல் இருந்தால் கண்டிப்பாக உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை செய்து முடி உதிர்வதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது நல்லது.
பத்தொன்பது வயதிலேயே முடி லேசாக உதிர ஆரம்பிக்கும் போதே கவனித்தால் ஆரம்பத்திலேயே சரி செய்து விடலாம்.
அதற்கு, ஒழுங்கான உணவு மற்றும் வாழ்க்கை முறையை கடைபிடித்து வந்தால் முடியை ஆரோக்கியமாக வைத்து முடி உதிர்தலை தடுக்கலாம்.
முக்கியமாக தினசரி காலை எழுந்தவுடன் பதினஞ்சு நிமிடங்களுக்கு விரல் நுனிகளால், தலையில் நன்றாக மசாஜ் செய்து வந்தால் வேர்க்கால்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் வேர்க்கால்கள் பலகீனத்தைப் போக்கும். இப்படி செய்தால் முடி கொட்டுவதை தவிர்க்க முடியும். இதனை அனைவரும் முயற்சி செய்யலாம்.
இதனையம் படிக்கலாமே
- கசகசா பயன்கள் | Kasa Kasa Health Benefits in Tamil
- பேரீச்சம் பழத்தின் நன்மைகள் | Dates Benefits in Tamil
- வேப்பிலை மருத்துவ பயன்கள் | Veppilai Uses in Tamil
- பார்லி அரிசி பயன்கள் | Barley Rice Benefits in Tamil
- ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Red wine Benefits in Tamil
- யூகலிப்டஸ் எண்ணெய் பயன்கள் | Eucalyptus Oil in Tamil
- சுக்கான் கீரை பயன்கள் | Sukkan Keerai Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்
13 Comments
Comments are closed.