ஆல்பக்கோடா பழம் பயன்கள் | Alpakoda Fruit in Tamil
ஆல்பக்கோடாவின் அற்புத மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம்.
பதப்படுத்தப்பட்ட Plum பழங்களை தான், ஆல்பக்கோடா என்று அழைக்கின்றோம். ஆல்பக்கோடா நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
என்ற மருத்துவ தன்மைகள் உடைய இந்த ஆல்பக்கோடாவில் வைட்டமின்,மினரல் மற்றும் நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
உடலுக்கு தீங்கில்லாதது இந்த ஆல்பக்கோடா பழம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
குமட்டல்
ஒரு சிலருக்கு உடல் உபாதை மற்றும் சாப்பிட்ட உணவு சேராமல் இருந்தால் மற்றும் ஒரு சில பிரட்சணிகளினால் குமட்டல் உணர்வு ஏற்படும்.
இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட ஆல்பகோடாவை குமட்டல் வரும்போது வாயில் அடக்கி வைத்தால், குமட்டல் நிற்கும்.
ஆல்பக்கோடா பழம் மூன்று, தோல் நீக்கி நசுக்கிய இஞ்சி துண்டு இரண்டு, சிறிது பனங்கற்கண்டு மூன்றையும் நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர குமட்டல் சரியாகும்.
எனவே ஆல்பக்கோடா பழம் வாந்தி, குமட்டலை போன்றவற்றை சரி செய்யக்கூடியது.
பசியின்மை
இது பசியை அடக்கும் தன்மை கொண்டது. ஒரு சிலருக்கு பசியுணர்வே வராது. இதனால் ஒரு சிலர் மன உளைச்சலுக்கு உண்டாகின்றர்.
எனவே இவர்கள் தினமும் ஆல் பக்கோடா பழம் சாப்பிடுவதால் பசியின்மையை பிரட்சணையானது பூரண குணமாகும்.
அஜீரணத்தை போக்க வல்லது. உடலுக்கு பலத்தை கொடுக்கக்கூடிய தன்மையை கொண்டது.
மலசிக்கல்
நார்ச்சத்தானது அதிக அளவில் நிறைந்தது இந்த ஆல்பகோடா பழம். எனவே ஆல்பகோடா பழமானது
மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது.
செரிமான குறைபாடுகளை போக்கி வயிற்றினை சுத்தம் செய்வதோடு மலச்சிக்கலையும் குணமாக்கும்.
ஆல்பக்கோடா பழம் நான்கு ஒரு தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி பனங்கற்கண்டு எடுத்து இருநூறு மில்லி நீர் லிட்டர் காய்ச்சி, வடிகட்டி கொடுத்து வர மல சிக்கல் குணமாகும்.
குழந்தைகளுக்கு ஆல்பக்கோடா பழம் இரண்டு, அரை தேக்கரண்டி சோம்பு, அரை தேக்கரண்டி பனங்கற்கண்டு சேர்த்தால் போதும்.
இரத்த ஓட்டம்
ஆல்பக்கோடாவில், இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால்,இரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரியாக்குகிறது.
வலிமையான எலும்பு
நமது உடலுக்கு எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இதில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கக்கூடியது.
உடலில் இருக்கும் நச்சுக்களை வெளித்தள்ளி உடலுக்கு நன்மை அளிக்கக்கூடியது.
உடலில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கும். ஆல்பக்கோடா பழத்தில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது. சோர்ந்து போன உடலுக்கு தெம்பை தரக்கூடியது.
உடல் எடை குறைய
ஆல்பக்கோடா பழம் நான்கு ஒரு தேக்கரண்டி கொள்ளு எடுத்து இருநூறு மில்லி நீர் லிட்டர் காய்ச்சி வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடித்து வர உடல் எடை குறையும்.
ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும்.
உடல் எடை கூடும் நிலையில் கொழுப்புச்சத்தை குறைக்கக்கூடியதாக ஆல்பக்கோடா உள்ளது. உடலை தேற்றி, பலத்தை தரக்கூடிய தன்மையைக் கொண்டது.
இதனையும் படிக்கலாமே
கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்
8 Comments
Comments are closed.