வயிற்று புண் குணமாக | Vayiru Pun Marunthu in Tamil
அல்சர் என்பது வயிற்றில் உருவாகும் புண்கள். அதாவது உணவுக்குழாய் இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன் பகுதியில் இருக்கும் முட்சுவரில் உருவாகும் புண்களை குடல்புண் அல்லது வயிற்றுப் புண் என்கிறோம்.
அல்சர் பிரச்சனைக்கான முதல் அறிகுறி வயிற்று வலிதான். வயிற்றுப் பகுதியில் பற்றி எரிவது போல் வலி ஏற்படும்.
வயிற்றில் புண் ஏற்பட்ட இடத்தில் அமிலம் படும்பொழுது இந்த வயிற்று வலி ஏற்படுகிறது. வெறும் வயிற்றில் இருக்கும்போது இன்னும் அதிகமாக ஏற்படும்.
மணத்தக்காளி கீரை
இந்த கீரையை பாசிப்பரு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.
அதே போன்று இந்த கீரையை வெறும் வயிற்றில் பத்து இலைகளை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்.
மேலும் ஜீரணக் கோளாறுகள் கல்லீரல் கோளாறுகள், இருமல், இரத்த சோகை, தோல் வியாதிகள் போன்றவையும் குணமாகும்.
தேங்காய்ப்பால்
அல்சர்க்கு அருமையான வைத்தியம் இந்த தேங்காய் பால். தினமும் தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் அல்சர் குணமாகும். வேண்டுமென்றால் இதில் ஒரு ஏலக்காய், நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
மாங்கொட்டை பருப்பு
மாங்கொட்டை பருப்பை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு இந்த பொடி காலையும் மாலையும் ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் விரைவில் ஆறும்.
பச்சை வாழைப்பழம்
பச்சை வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வர வயிற்றுக் குடல்களில் பழுதுபட்ட மெல்லிய ஜவ்வுத் தோள்களை வளரச் செய்யும். இதனால் அல்சர் நோய் விரைவில் குணமாகும்.
புழுங்கல் அரிசி
புழுங்கல் அரிசி கஞ்சி உடைத்த புழுங்கல் அரிசியுடன் சிறிது வெந்தயம், ஒரு பல் பூண்டு, சிறிது சீரகம் சேர்த்து, கஞ்சியாக வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் விரைவில் ஆறும்.
தயிர்
தயிரில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து நோயை குணப்படுத்த உதவுகிறது.
எனவே தயிரை தின சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
பீட்ருட்
பீட்ருட்ஐ அரைத்து சாறு எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் வயிற்றுப் புண் விரைவில் குணமாகும்.
மாதுளைபழம் தோல்
மாதுளைப் பழத்தோலை வெயிலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு இரவில் தூங்கச் செல்லும் முன் ஒரு சிட்டிகை மாதுளைப் பொடியை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
கொத்தமல்லி ஜூஸ்
அல்சரை குணப்படுத்தும் அருமையான வீட்டு வைத்தியம் இது. ஒரு கைப்பிடி கொத்தமல்லியை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸ்சியில் விட்டு அரைத்து ஜூஸ் எடுத்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.
மேலும்
அல்சர் குணமாக உணவு கட்டுப்பாடு மிக மிக அவசியம். காபி, டீ, பாட்டில் பானங்கள், ஊறுகாய் அதிகம் காரம் சேர்த்த உணவுகள், வறுத்த மற்றும் மசாலா நிறைந்த உணவுகள், மது, சிகரெட், செவப்பு நிறமுள்ள இறைச்சிகள், செரிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் துரித உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இரவில் நீண்ட நேரம் கண் விழிக்கக் கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீராவது அவசியம் குடிக்க வேண்டும்.
எப்பொழுது பார்த்தாலும் எதைப் பற்றியாவது கவலைப்படுவதை, தவிர்க்க வேண்டும்.
உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும். இப்படி, தொடர்ந்து செய்து வந்தால் அல்சர் முற்றிலும் குணமாகும்.
இதனையும் படிக்கலாமே
- ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil
- பேரீச்சம் பழத்தின் நன்மைகள் | Dates Benefits in Tamil
- கசகசா பயன்கள் | Kasa Kasa Health Benefits in Tamil
- கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil
- மோர் பயன்கள் | Buttermilk Benefits in Tamil
- சுக்கான் கீரை பயன்கள் | Sukkan Keerai Benefits in Tamil
- இலந்தை பழம் பயன்கள் | Elantha Palam Benefits in Tamil
- ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் | Red wine Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
13 Comments
Comments are closed.