தோல் நோய் சித்த மருத்துவம் | Skin Allergy in Tamil
நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுமே ஒவ்வொரு வேலையை செய்து வருகிறது. இதில் நமது தோல் என்பது நமது உடல் உள் உறுப்புகளை பாதுகாப்பது மட்டுமின்றி உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தவும் வியர்வையை வெளியேற்றவும் உதவுகிறது.
அதே சமயம் பல நுண்கிருமிகளும் உயிர் வாழ என்பதும் உண்மை. இப்படி நமது சருமத்தில் வாழும் நுண்கிருமிகள் ரத்தத்தில் கலந்துவிடவும் வாய்ப்பு உண்டு.
இதனால் தோலில் அரிப்பு, வெடிப்பு, தோல் சிவத்தல், செதில் செதில் ஆக உதிர்தல், நிறமாற்றம் இப்படி பல உபாதைகளுக்கு தோலில் வளரும் கிருமிகளே காரணமாக உள்ளது.
இந்த கிருமிகள் தோலின் அடுக்குகளை கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி வியர்வை துவாரங்களை சிதைத்து தோலுக்கு நிறத்தை தரும், மெலானின் மற்றும் ரோமத்திற்கு நிறத்தை தரும் நிறமிகளை அழித்து கொஞ்சம் கொஞ்சமாக நுண்ணிய ரத்தக்குழாய் மூலமாக ரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது.
இந்த கிருமிகள், மூச்சுப்பாதை, பாதை என எல்லா இடங்களிலும் பல தொல்லைகளை உண்டு பண்ணுகிறது. மேலும் இந்த நுண்கிருமிகளால் தோல் கடும் பாதிப்படைகிறது.
இதனால், தோல் வறட்சி, சொறி சிரங்கு, படை, கரப்பான், முகப்பரு, உடலில் அங்கங்கே தடிப்பு ஏற்படுதல், வெண்குஷ்டம், பொடுகு, பூச்சி வெட்டு, சொத்தை, தொடை இடுக்கு மற்றும் அக்குள், கழுத்துப் பகுதிகளில் கடும் அரிப்பு போன்ற பல தொல்லைகளை உண்டாக்குகிறது.
இப்படி தோல் நோய் உள்ளவர்கள் கட்டாயம் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
நன்னாரி வேர்
சரும பிரச்சனைகளை போக்க நன்னாரி வேரை, எப்படி பயன்படுத்துவது என்று, பார்ப்போம்.
இந்த நன்னாரி வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடக்கிறது. ஒரு இருபது கிராம நன்னாரி வேரை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
இது இருநூறு மில்லி ஆகியதும் இறக்கிவிட வேண்டும். காலையில் நூறு மில்லி மாலை நூறு மில்லி என்று குடித்து வந்தால் தோல் நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
வேப்பிலை & சின்ன வெங்காயம்
ஒரு கைப்பிடி வேப்பிலை, மூன்று சின்ன வெங்காயம் இந்த ரெண்டையும் அரைத்து உடல் முழுவதும் பூசி வைத்திருந்து ஒரு அரை மணி நேரம் கழித்து தண்ணீரில் குடிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
அருகம்புல் & மஞ்சள்
அருகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு துண்டு இது இரண்டையும் மைய அரைத்து தோல் நோயால் பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
இப்படி வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குடித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.
சதுர கள்ளி
பொதுவாக நோயின் தீவிர நிலையில் கடும் காரத்தன்மையுள்ள மருந்துகளை பயன்படுத்தினால் மட்டுமே நோய்கள் கட்டுப்படும். அந்த வகையில் காரத்தன்மை அதிகம் நிறைந்த அற்புத மூலிகைதான் சதுர கள்ளி.
இது, சாலை ஓரங்களில் அதிகமாக முளைத்து காணப்படும், கள்ளி வகையை சார்ந்த, செடியாகும். இந்த செடிகள் சித்தாள் மருத்துவத்தில், ஏராளமாக, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சதுர கள்ளியை சாறு எடுத்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி பதமாக எடுத்து வைத்துக் கொண்டு தோலில் உள்ள சொறி, சிரங்கு மற்ற சரும நோய்களில் தடவி வரலாம்.
அதே போன்று மிளகை சதுர கள்ளி சாற்றில் ஊற வைத்து வெயிலில் நன்கு உலர்த்தி நல்லெண்ணெயில் மூழ்கும்படி பத்து நாட்கள் வைத்திருந்து, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
சரும நோய்கள் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்
கத்திரிக்காய்
முதலில் கத்திரிக்காய் சைவப் பிரியர்களுக்கு மிகவும் அருமையான சுவையுள்ள என்றாலும் சிலருக்கு, இந்த கத்திரிக்காய், ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.
பொதுவாக நிறைய பேர் கத்திரிக்காய் சாப்பிட்டால் எனக்கு அரிக்கும் என்பார்கள். காரணம் கத்திரிக்காயில் அதிகப்படியான புரதம், செரின் ஹிஸ்டைடின் இருப்பதால் சிலரின் உடல் தன்மைக்கு ஒத்துப் போகாமல் அலர்ஜி ஐ உண்டாக்குகிறது.
அதிலும் சரும நோய் உள்ளவர்கள் கத்திரிக்காயை தவிர்ப்பது நல்லது.
மீன்கள்
மீன்களையும் தோல் நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. அதிலும் கடல் மீன்களை தொட்டு கூட பார்க்கக் கூடாது.
அதே போன்று நண்டையும் சரும பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது. முக்கியமாக கருவாட்டையும் தவிர்ப்பது நல்லது.
மேலும்
1.முட்டை, கோழி இறைச்சி இவற்றையும் தவிர்ப்பது நல்லது.
2.தக்காளியை உணவுகளில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
3.மாங்கா போன்ற, புளிப்பு உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
4.அவரைக்காய் மற்றும் பாகற்காய்யையும் சரும நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
5.சிறிய விதை உள்ள காய்களான சுண்டைக்காய், மணத்தக்காளி வற்றல் இவைகளும் சரும நோய்களுக்கு, ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
6.கீரையில் அகத்திக்கீரையை மட்டும் தவிர்க்க வேண்டும்.
7.பழங்களை எடுத்துக் கொண்டால் கொய்யாப்பழத்தை தவிர்க்க வேண்டும்.
8.எண்ணெயில் வறுத்து பொரித்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.
9.கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கு, காரா கருணை இவற்றையும் தவிர்ப்பது அவசியம்.
எனவே, சரும பிரச்சனை உள்ளவர்கள் இங்கே சொன்ன வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்தும் மேற்க்கண்ட தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்த்து வந்தால் தோல் நோய்கள் முற்றிலும் குணமாகும்.
இதனையும் படிக்கலாமே
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- நன்னாரி பயன்கள் | Nannari benefits in tamil
- முளைக்கீரை பயன்கள் | Mulai Keerai Benefits in Tamil
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
- வாய் புண் குணமாக மருந்து | Vai Pun Treatment in Tamil
- துரியன் பழம் பயன்கள் | Durian Fruit in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
10 Comments
Comments are closed.