சிவப்பு சந்தனம் பயன்கள் | Red Sandalwood in Tamil

சிவப்பு சந்தனம் பயன்கள் | Red Sandalwood in Tamil

கேரளா பெண்கள் அழகாக இருப்பதற்கு தேங்காய் மட்டும் காரணம் இல்லை. மற்றொரு காரணம் சிகப்பு சந்தனம் தான். அவர்கள் இதனை தினசரி முகத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதில் சருமத்திற்கு தேவைப்படுகின்ற அணைத்து விதமான சத்துக்களும் அதிக அளவில் உள்ளது.

ஆகவே தினசரி இந்த சிவப்பு சந்தனம் முகத்திற்கு பயன்படுத்தி வருவதன் மூலமாக சருமத்தில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை தடுக்கலாம்.

சரும ஆரோக்கியம்

சருமம் அழகான தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்றால் சருமத்தில் உள்ள செல்களுக்கு போதிய அளவு ஊட்டச்சத்துக்கள் வேண்டும். இந்த சிவப்பு சந்தனமானது சரும செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.

சிவப்பு சந்தன பொடி ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று செய்துகொள்ள வேண்டும். இந்த பேஸ்டை தினசரி முகம், கை, கால்களுக்கு தடவி வருவதன் மூலமாக சருமம் அழகாக ஆரோக்கியத்துடன் தோற்றமளிக்கும்.

சிவப்பு சந்தனம் பயன்கள்

முகப்பொலிவு

ஒரு சிலருக்கு முகம் எப்பொழுதும் பொலிவிழந்த தோற்றத்துடன் காணப்படும். அவர்கள் ஒரு பௌலில் 2 தேக்கரண்டி தயிர் ஊற்றவும் அதனுடன் ஒரு தேக்கரண்டி சிகப்பு சந்தன பொடி மற்றும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் நன்றாக தடவி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்னர் நன்கு முகத்தினை கழுவினால் போதும். முகம் பொலிவாக இருக்கும்.

தழும்புகள் மறைய

பருக்கள் வந்து சரியான பின்னர் அந்த இடங்களில் தழும்புகள் ஏற்படும். இது முகஅழகினை கெடுக்கும்.

இந்த தழும்புகளை சிவப்பு சந்தனம் கொண்டு சரி செய்யலாம். நான்கு தேக்கரண்டி தேங்காய் பாலில் இரண்டு தேக்கரண்டி பாதம் என்னை அதனுடன் நான்கு தேக்கரண்டி சிவப்பு சந்தன போடி சேர்த்து கலந்து பருக்கள் இருந்த இடங்களில் தடவி வருவதன் மூலமாக தழும்புகள் விரைவில் மறையும்.

sivappu santhanam uses in tamil

இறந்த செல்கள்

இறந்த செல்கள் இருந்தால் சருமம் சொரசொரப்புடன் இருக்கும். இந்த சிவப்பு சந்தானம் இறந்த செல்களை சருமத்தில் இருந்து வெளியேற்றி சருமத்தினை புத்துணர்ச்சியான் தோற்றத்துடன் காட்டும்.

அதற்கு இரண்டு தேக்கரண்டி மசித்த பப்பாளி உடன் ஒரு தேக்கரண்டி சிவப்பு சந்தனைத்தை நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

அதனை சருமத்தில் தடவி மெதுவாக மஜாஜ் செய்ய வேண்டும். சிறுது நேரம் ஊற வைத்த பின் வெந்நீரில் கழுவ வேண்டும்.

கருமை சருமம்

ஒரு சிலர் வெய்யிலில் அதிகம் வேலை செய்வதால் சருமம் கருமையாக காணப்படும். அவர்கள் தினசரி 2 தேக்கரண்டி சிவப்பு சந்தன பொடியுடன் தயிர் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளளவு. அந்த பேஸ்டினை முகத்தில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து பின்னர் கழுவினால் நல்ல ஒரு மாற்றம் தெரியும்.

red sandalwood powder uses in tamil

முகப்பரு

ஒரு சிலர் முகப்பருவால் அவதிப்படுவாராகள். அவர்கள் ரோஸ் வாட்டர் உடன் சிவப்பு சந்தன பொடியை சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவ வேண்டும். அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் கழுவ வேண்டும். அடிக்கடி செய்த் வருவதன் மூலமாக முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

முதுமை தோற்றம்

சிலர் இளம் வயதிலேய முதுமையான தோற்றத்துடன் சருமம் சுருக்கத்துடன் காணப்படுவர். இத்தகையவர்கள் நான்கு தேக்கரண்டி சிவப்பு சந்தன பொடி உடன் இரண்டு தேக்கரண்டி சீமைச்சாமந்தி டீ சேர்த்து சரும சுருக்கம் உள்ள இடங்களில் தடவ வேண்டும். சிறிது நேரம் களித்து கழுவிய பின்னர் சரும சுருக்கங்கள் குறைய தொடங்கும்.

red sandalwood powder benefits in tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வளைத்ததின்  Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: ปลูกผม
  2. Pingback: Springfield carts
  3. Pingback: กงล้อ888
  4. Pingback: safe eft cheat

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning