கோடைகாலத்தில் முலாம்பழம் சாப்பிடுவது நல்லதா?

முலாம்பழம் நன்மைகள்

முலாம்பழம் கோடைகாலம் ஆரம்பித்து விட்டாலே பழ கடைகளிலும் ரோட்டோரத்தில் உள்ள கடைகளிலும் தர்பூசணிக்கு அடுத்த படியாக அதிகம் காணப்படக்கூடிய ஒரு பழம்.

இதனை மஸ்கி மிலான், கிர்ணிப்பழம் என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு உருண்டை வடிவில் ஒரு சின்ன பூசணிக்காய் போன்று இருக்கக்கூடியது.

இந்த முலாம்பழத்தில் தொண்ணூற்றி ஐந்து சதவீதத்திற்கும் அதிகமான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது.

இது தவிர வைட்டமின் ஏ, சி, இ, கே போன்ற வைட்டமின் சத்துக்களும், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், மாங்கனீசு போன்ற தாது சத்துக்களும் மற்றும் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடென்களும் பைட்டோ நியூட்ரின்களும் அடங்கியது முலாம்பழம்.

இதில் அதிகப்படியான சத்துகளை கொண்ட ஒரு பழம் என்றாலும் கூட இதனுடைய மனம் பலருக்கும் பிடிக்காது.

இதன் காரணமாகவே பலரும் இதனை வாங்கி சாப்பிட விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த மூலம் பழத்தினுடைய நன்மைகளையும் அதனுடைய மருத்துவ பயன்களும் தெரிந்து கொண்டீர்கள் என்றால் கண்டிப்பாக வாங்கி சாப்பிட தவறமாட்டீர்கள்.

உடல் சூட்டை குறைக்க

பொதுவாக வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே உடல் உஷ்ணம் அதிகரித்து வயிற்று வலி, சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சல், தோலில் அரிப்பு, காந்தல் என பல்வேறு பிரச்சனைகளினால் அவதிப்படுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் இந்த முலாம்பழத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர் சத்து உடலில் நீர் தேவையை பூர்த்தி செய்து உடலினை நன்கு குளிர்ச்சியாகவும் வைக்கக் கூடியது.

எனவே அதிக உடல் உஷ்ணத்தினால் அவதிப்படுபவர்கள் உடல் சூட்டைக் குறைக்க இது ஒரு சிறந்த பழம்.

செரிமான கோளாறுகளைக் குணமாக்கும்

முலாம்பழம் வயிற்றுக்கு நல்ல குளிர்ச்சியை தருகிறது. அதுமட்டுமில்லாமல் வயிற்றில் உள்ள அமிலத்தின் அளவினை சமநிலை படுத்தி சாப்பிடுகின்ற உணவினை எளிதில் சீரணமாக உதவுகிறது.

இதன் மூலமாக வயிற்று வலி, நெஞ்சு எரிச்சல், வயிற்று உப்புசம் போன்ற செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.

முலாம்பழம் அதிக நார்ச்சத்து கொண்ட பழம் என்பதால் மலக்குடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மலச்சிக்கலையும் தடுக்கும்.

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான வைடமன் சி வயிற்றுப்புண்கள் என்று சொல்லக்கூடிய அல்சரினை குணமாக்கும் ஆற்றல் கொண்டது.

எனவே செரிமானம் சார்ந்த எந்த ஒரு பிரட்சணியினால் அவதிப்படுபவர்கள் ஆக இருந்தாலும் மதியம் மற்றும் இரவு உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த முலாம்பழத்தை சாப்பிட்டு வர செரிமானம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் மிக விரைவில் குணமாகும்.

புற்றுநோய் வராமல் தடுக்கும்

முலாம்பழம் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடக்கூடிய அன்டிஆக்ஸடன்ட் கள், ஃப்லொவ்வ நாய்டுகள் மற்றும் கரட்டி நாய்டுகள் போன்ற சத்துக்கள் அதிக அளவில் உளள்து.

இது உடலில் புற்றுநோய் செல்களை அளிப்பது மட்டுமில்லாமல், புற்றுநோய் வருவதற்கு காரணியாக இருக்கக்கூடிய ஃபிரீரேடிக்கல்ஸ் சொல்லக்கூடிய நச்சுக் கழிவுகளையும் வெளியேற்றும்.

முலாம்பழத்தினை தொடர்ந்து உணவுகளோடு சேர்த்து சாப்பிட்டுவர, மலக்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற புற்றுநோய்கள் வருவது தடுக்கப்படும்.

குறிப்பாக லங்ககேன்சர் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த முலாம்பழத்திற்கு பழத்திற்கு உண்டு என பல்வேறு ஆய்வுகளில் நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த தேவையான வைடமன் சி அதிகம் நிறைந்தது முலாம்பழம்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள் பீட்டா கரோட்டின் வைடமன் ஏ போன்ற சத்துக்கள் வயிற்றில் இருக்ககூடிய நல்ல பாக்டிரியாக்களின் அளவை அதிகரிக்கும்.

இதனால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் அளவினை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த கூடியது இந்த முலாம்பழம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது

முலாம்பழம் ஒரு குறைந்த கிளைசமிக் இன்டெக்ஸ் கொண்ட ஒரு பழம் என்பதினால் இதில் இருக்கக்கூடிய பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் போன்ற இனிப்பு சத்துக்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாது.

குறிப்பாக டயபெடிக் நேப்ரோபதி என்று சொல்லக்கூடிய சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய சிறுநீரக செயலிழப்பை வராமல் தடுக்க கூடிய ஆற்றல் இந்த பழத்திற்கு உண்டு.

எனவே சர்க்கரை நோயாளிகள் அளவாக சாப்பிடால் இது ஒரு அற்புதமான பழம்.

இரத்த அழுத்தத்தை சீராக்கும்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் முலாம்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

இதில் உள்ள இரத்த நாளங்களில் உள்ள அழுத்தத்தை பொட்டாசியம் கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு காரணியாக உள்ள சோடியம் உப்பின் அளவினை குறைக்கிறது.

இதில் இருக்கக்கூடிய அடினோசின் என்னும் ஒரு வகை சேர்மம் இரத்தத்தை மென்மையாக்கும். அதோடு இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைவதை தடுக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது

கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் ஆசிட் மட்டும் இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைப்பது உண்டு. இந்த இரண்டு சத்துக்களுமே அதிக நிறைந்தது முலாம்பழம்.

முலாம்பழம் இரத்ததில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கிறது. கருவில் வளருகின்ற குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது.

பெண்களுக்கு கற்ப காலங்களில் ஏற்படக்கூடிய கால் வீக்கம் ஏற்படுவதை குறைக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு நன்மை தரக்கூடிய ஒரு பழம் என்றாலும் கூட கர்ப்பினிப்பெண்கள் முலாம்பழத்தினை அளவாக தான் சாப்பிட வேண்டும்.

சிறுநீர் கற்களை கரைக்கும்

முலாம்பழம் ஆக்சிலைன் என்று சொல்லக்கூடிய ஒரு அறிய வகை சத்து அதிக அளவில் உளள்து. இது சிறுநீரகங்களில் உண்டாக்கக்கூடிய கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது.

முலாம்பழம் சிறுநீரக கற்களை கரைப்பது மட்டுமில்லாமல் இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர் சத்து, சிறுநீரைப் பெருக்கி கற்கள் எளிதில் வெளியேற்ற உதவி செய்கிறது.

கண் ஆரோக்கியத்தினை மேம்படுத்த

முலாம்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் ஏ, பீட்டாகரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கிறது.

இது கண் கேற்றதிசுக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதோடு, கண்களில் புறை உருவாக்கத்தினை தடுக்கும்.  முலாம்பழத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண் சார்ந்த பிரச்சனைகள் வருவது தடுக்கப்படுவது மட்டுமில்லாமல், கண் பார்வை திறன் மேம்படும்.

சரும ஆரோக்கியத்திற்கு

சரும அழகிற்கு ஆதாரமாக இருக்கக்கூடிய கொலாஜன் செல்களை மீளுருவாக்கம் செய்யும் ஆற்றல் இந்த மூலம் பழத்திற்கு உண்டு.

இதில் இருக்கக்கூடிய போலிக் ஆசிட், வைடமன் சி ,கே போன்ற சத்துக்கள் சர்மங்கள் ஏற்படக்கூடிய தேமல், கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள், சரும எரிச்சல் மற்றும் பல்வேறு சருமம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல ஒரு தீர்வு தரக்கூடியது.

இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நீர் சத்து சரும வறட்சியை போக்கி நல்ல மிருதுவான சருமத்தையும் கொடுக்கக்கூடியது.

மேலும்….

முலாம்பழம் இவ்வளவு நன்மைகளை கொடுக்கக்கூடிய பழம் என்றாலும் கூட, இது உடலுக்கு அதிக குளிர்ச்சி கொடுக்கக்கூடிய ஒரு பழம் என்பதனால் சளி, கபம், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் முலாம்பழத்தினை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும்.

வாத நோய்களான மூட்டுவலி, கீல்வாதம் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் முலாம்பழத்தினை தவிர்ப்பது மிகவும் நல்லது.

 

muskmelon benefits in tamil and mulampalam payangal

Related Posts

2 Comments

  1. Pingback: harem77

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning