கஸ்தூரி மஞ்சள் பயன்கள் | Kasthuri Manjal Benefits in Tamil
மஞ்சள் வகைகளில் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்ட கஸ்தூரி மஞ்சளின் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
அதிகம் நறுமணத்தைத் கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விட அதிகம் தரக்கூடியது .
தோல் நோய்களைப் போக்குவதற்கு சாதாரண மஞ்சளை விட, அதிக சக்தியும் கொண்டது.
கருப்பை புற்றுநோய்
பெண்கள், கஸ்தூரி மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் கருப்பை புற்றுநோய் நெருங்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.
தோல் தொடர்பான எந்த நோய்களையும் வரவிடாமல் தடுக்கக்கூடியது.
அடிபட்ட புண்கள்
கஸ்தூரி மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயில் கலந்து வைத்து கொள்ளவும். அதனை அடிபட்ட புண்கள் அல்லது சிரங்குகளின் மீது பூசி வருவதன் மூலமாக விரைவில் குணமாகும்.
அலர்ஜி
கஸ்தூரி மஞ்சள் அலர்ஜி எதிர்ப்பு தன்மை கொண்ட ஒரு பொருளாகும்.
சூரிய ஒளியின் பாதிப்பு, அழுக்கு, காற்று மாசு போன்ற காரணங்களினால் ஏற்படும் தோல் அலர்ஜியை போக்கி சருமத்தை பாதுகாக்கக்கூடியது.
சரும பொலிவு
சருமத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ குணங்களும் இதில் நிறைந்துள்ளன.
இது சருமத்தில் ஆழ்ந்து ஊடுருவி அழுக்கை அகற்றி, சரும செல்களை புத்துணர்வுடனும், பொலிவாகவும் வைக்க உதவுகிறது.
இதை அடிக்கடிப் பூசி குளித்து வந்தால், சருமத்தை மென்மையாக மாற்றிவிடும்.
முதிர்வான தோற்றம்
கஸ்தூரி மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கி வயது முதிர்வுத் தோற்றத்தைத் தடுக்கிறது.
இரத்தத்தை சுத்திகரிக்க
தோல் நோய்களை சரி செய்யும் தன்மை மட்டுமின்றி, உடலில் ரத்தத்தையும் சுத்திகரிக்கும் ஆற்றல் உடையது.
இதனை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்படுத்தினால், உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
நகசுத்தி
குப்பைமேனி இலையை அரைத்து, கஸ்தூரி மஞ்சள் பொடியை கலந்து சேற்றுப்புண், நகச்சுத்தி போன்றவற்றின் பூசி வரும் பொழுது, விரைவில் குணமாகிவிடும்.
கரும்புள்ளிகள்
கஸ்தூரி மஞ்சள் பொடியுடன் கற்றாழை சாற்றை கலந்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து வெறும் நீரால் கழுவி வரும்பொழுது முகத்தில் ஏற்படும் கருமை, கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும்.
மேற்கூறிய, எண்ணற்ற நன்மைகளை அளிக்கும் கஸ்தூரி மஞ்சளை அனைவரும் பயன்படுத்தினால் பல விதமான சரும நோய்களில் இருந்து விடுபட முடியும்.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- அழுகண்ணி மூலிகை | Alukanni Mooligai(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்
19 Comments
Comments are closed.