இஞ்சியின் பயன்கள் | Ginger uses in tamil
இஞ்சியின் பயன்கள் | Ginger uses in tamil இஞ்சி எண்ணற்ற நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டது இஞ்சியில் உள்ள மருத்துவ குணகங்ளை பற்றி இந்த பதிவில் காண்போம். இஞ்சி என்பது, சித்தமருத்துவத்தில், பல நோய்களை குணமாக்கும், ஒரு அற்புத பொருளாக பயன்படுத்தப் படுகிறது.
அதற்கு காரணம் அதில் உள்ள அதிக அளவு எதிர்ப்பு சக்தியே ஆகும். இஞ்சியை தோள் நீக்கி விட்டு, நன்கு பொடியாக நறுக்கி, அதற்கு தேவையான அளவு தேன் ஊற்றி ஊற வைத்து, தினந்தோறும் காலை வெறும் வயிற்றில், அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வரும் பொழுது, எண்ணற்ற நோய்கள் மாயமாக மறையும்.
இந்த இஞ்சி மற்றும் தேன் சேர்ந்த கலவையை, வாரம் ஒரு முறை தயார் செய்து கொண்டு, தினந்தோறும் பயன்படுத்தி வரலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
மேற்கூறியவாறு இஞ்சியை, தினந்தோறும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் பொழுது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கும்.
நோய் தோற்று
சுவாசப் பாதை, வாய், தொண்டை, வயிறு போன்ற பகுதிகளில் உள்ள, கிருமித் தொற்றுகளை அகற்றும். ரத்தத்தின் கெட்டித்தன்மையை குறைத்து உடலில் கெட்ட கொழுப்புகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி, உடல் எடையை படிப்படியாக குறைக்கும்.
உடல் உபாதைகள் நீக்கும்
இதய நாளங்களில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. இதய நோய்கள் வரும் அபாயத்தை தடுக்கிறது. உடலில் ஏற்படும் பித்தம், கிறுகிறுப்பு, தலை வலி, migraine எனப்படும் ஒற்றை தலை வலி, போன்றவற்றை படிப்படியாக குறைக்கும்.
மேலும், பயணத்தின் போது ஏற்படும் வாந்தி , தலை வலி, கர்ப்ப காலங்களில் ஏற்படும் வாந்தி, உணவு செரிமானமின்மையால் ஏற்படும் வாந்தி போன்ற, எந்த விதமான வாந்தியாக இருந்தாலும் இஞ்சி ஒன்றே போதும்.
இஞ்சியை சிறிதளவு எடுத்து தட்டி ஒரு டம்ளர் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து ஆறியதும் தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் அருந்தி வரும் பொழுது குணமடையும்.
நாள்பட்ட அஜீரணம், வாயுத் தொல்லை, அடிக்கடி சளி பிடித்தல், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பாதிப்பு, இரைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு, இஞ்சி சிறிதளவு எடுத்து தட்டி, அதனுடன் ஐந்தாறு மிளகு சேர்த்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட் வரும் பொழுது குணமடையும்.
கருப்பையை வலுவாக்குகிறது
பெண்களுக்கு கருப்பையை வலுவாக்கும் சிறந்த மருந்தாக இஞ்சி செயல்படுகிறது. இஞ்சியை உட்கொண்டு வரும்பொழுது கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேறத் தொடங்கும். கருப்பையில் கட்டிகள் வராமல் பார்த்துக் கொள்ளும். கருப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்களும் இஞ்சியில் உணவில் சேர்த்து வருவது சிறந்தது.
பல்வலி, பல் கூச்சம்
பல்வலி, பல் கூச்சம் உள்ளவர்கள் இஞ்சி ஒரு துண்டு எடுத்து வலியுள்ள இடத்தில் கடித்து, அப்படியே சிறிது நேரம் வைத்திருந்தால், அதில் உள்ள நோய் எதிர்ப்புப் பண்புகள், பல்வலி மற்றும் பல் கூச்சத்தை குணமாக்கும்.
காதில் உள்ள உபாதைகளுக்கு
காதில் சீழ் வடிதல், காதில் கிருமி தொற்று போன்ற பிரச்சனைகளுக்கு, தினமும் தேனில் ஊறவைக்க, இஞ்சியை சாப்பிட்டு வரும் பொழுது, நாளடைவில் குணமடையும்.
புற்று நோய்க்கு எதிரி
இஞ்சி புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் கொண்டது. நுரையீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், தொண்டை மற்றும் புற்றுநோய் போன்ற பலவகையான புற்றுநோய்களை தடுக்கக்கூடியது.
Thyroid பாதிப்பு உள்ளவர்கள் தினந்தோறும் இஞ்சி கஷாயம் அருந்தி வரும் பொழுது, thyroid hormoneகள் சீராக சுரக்கும். உடலின் இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
இஞ்சியில் உள்ள எதிர்ப்பு சக்தி பொருள், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது.
மூளைக்கு வலிமையை தரக்கூடியது. மூளையின் நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதுடன், நினைவாற்றலை அதிகரிக்க கூடியது.
இன்னும் ஏராளமான நன்மைகள் இஞ்சியை நாம் தினசரி உணவில் எடுத்துக்கொண்டால் கிடைக்கும்.
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
7 Comments
Comments are closed.