கருவாடு பயன்கள் | Dry Fish Benefits in Tamil
கருவாடு சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பதை பற்றிஇன்று தெரிந்து கொள்வோம்.
யாரெல்லாம் சாப்பிட கூடாது
இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், தோல் நோயாளிகள், செரிமான சிக்கல் மிக்க உள்ள நோயாளிகள் கடும் நீரிழி நோயாளிகள், அமிலத்தன்மை உடலில் அதிகம் உள்ள நோயாளிகள் உள்ளிட்ட சில வகை நோயாளிகள் தவிர மற்றவர்கள் கருவாடு உண்பது நன்மையே தரும்.
உடலிற்கு ஏற்ற கருவாடு
இந்த கருவாடுகளில் இரால், குரவை, திருக்கை, தேனி, அயிரை, சுறா, மசரை, கிழங்கான், நெய்தோலி ஆகிய மீன்களின் கருவாடுகள் சிறந்த பலன்களை தருபவை.
சாப்பிடக்கூடாத கருவாடு எது
சாதாரண உடல் நலலின் போது கூட இவற்றை உட்கொள்ளலாம். மருந்தின் வீரியத்தையும் பலனையும் முறிக்காத பத்திய கருவாடுகள், இந்த வகை. வாழை இறால் விலாங்கு, பருகண்டை, சேர்கண்டை, சன்னக்கூனி ஆகிய மீன்களின் கருவாடுகளை தவிர்ப்பது, நல்லதென்று நமது சித்தா மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.
கொடுவா கருவாடு
கொடுவா மீனை விட கொடுவா கருவாடு சத்துகள் செறிந்தது. இதை கொடுவா மீனுடன் ஒப்பிடும் பொழுது புரதச் சத்து நான்கு மடங்கு, தாது உப்புகளின் செரிவு பத்து மடங்கும், இரும்புச்சத்து ஐந்து மடங்கும், சுண்ணாம்புச்சத்து இரண்டு மடங்கும் அதிகம் உள்ளது.
இந்த கொடுவா கருவாடை உட்கொள்ளுவதன் மூலம், உடல் பலவீனம், நோய் எதிர்ப்பாற்றல், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, ரத்த சோகை, உடல் மெலிவு உள்ளிட்ட பல வகையான உடல் சிக்கல்களிலிருந்து எளிதாக மீள முடியும்.
நூறு கிராம் கொடுவா கருவாடு 266 கலோரி ஆற்றலை நமது உடலுக்கு அளிக்கிறது. நூறு கிராம் கொடுவா மீன் நமது உடலுக்கு 79 கலோரி ஆற்றலை மட்டுமே, அளிப்பது குறிப்பிடத்தக்கது.
உப்பங்களுத்தி கருவாடு
உப்பங்களுத்தி மீனை விட கெளுத்தி கருவாட்டிலேயே மிகுந்து அதிகம் உள்ளது. நூறு கிராம் உப்பங்களுத்தி கருவாடு 255 கலோரி ஆற்றலை நமது உடலுக்கு அளிக்கிறது.
கொடுவாமீன் கருவாட்டில் உள்ள பலன்களை இந்த கருவாடும் நமக்கு தரவில்லை.
கச்சர் கருவாடு
ஏரி, ஆறு, முதலிய நல்ல நீர்நிலைகளில் வாழும் சன்னக் கண்டை மீனை மட்டும் உலர்த்திய கருவாடு கச்சர் கருவாடு ஆகும்.
நல்ல நீர்நிலைகளில் வாழும் பலவகை சிறு மீன்களை எல்லாம் உலர்த்தி கச்சர் கருவாடு என்று விற்பனை செய்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.
போலிகளுக்கு கச்சர் கருவாட்டின் மருத்துவ பலன்கள் கிடையாது. கச்சர் கருவாடு உட்கொள்வதன் மூலம் வாய்வு, சளி ஆகியவையும், அவை சார்ந்த இதர உடற்பிணிகளும் குணமாகும்.
உடல் அரிப்பைப் போக்கும். பசியின்மையை நீக்கும் சீரான சக்தியை அதிகரிக்கும். சில வகை காய்ச்சல்களை நீக்கும். இதில் உள்ள பெரிய குறைபாடு பித்தத்தை அதிகரிக்கும் என்பதுதான்.
இதை உட்கண்ட இரண்டு மணி நேரம் கழித்து உயர்தர ஓம திரவம் அல்லது சுக்கு காஃபி பருகுவதன் மூலம் பித்த அதிகரிப்பை நாம் சீரமைத்துக் கொள்ளலாம்.
சீலா கருவாடு சீலா மீனை விட 100 கிராமில், 92 கலோரி, சீலா கருவாடு 100 கிராமில் 210 கலோரி. உடலுக்கு அதிக ஆற்றலை தரக் கூடியது.
கொடுவா உப்பங்களுக்கு உரிய மருத்துவ பலன்களை இந்த சீலா கருவாடும் கொடுக்கிறது. சுவையில் வஞ்சர மீன் கருவாட்டை நிகர்த்ததாக இது இருக்கும்.
இறால் கருவாடு
உடலுக்கு பலமும் தாது விருத்தியும் கொடுக்கும். ரத்த விருத்திக்கு களவீச்சை விருத்திக்கும் வழி வகுக்கும். அதே சமயம் வாய்வு பிடிப்பு, பசி மந்தம், மூட்டு வலி, அரிப்பு, வயிறு உப்புசம் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகளையும் இது ஏற்படுத்தக்கூடியது.
கொள்ளிக்கருவாடு
கோலாமின் கருவாடு கொள்ளிக்கருவாடு என்று அழைக்கப்படுகிறது.
கொள்ளிக்கருவாட்டிற்கு சளியை நீக்கும், தன்மை உண்டு என்றாலும் சொறி, சிரங்கு, ஒவ்வாமை, உடல் பொலிவு சீர்குலைவு உள்ளிட்ட, பாதிப்புகளை இந்த கொள்ளிக்கருவாடு ஏற்படுத்தும்.
எனவே இதை அடிக்கடி உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
சுறா கருவாடு
சில வகை வயிற்று வலி சில வகை பேதி முதலியவற்றை குணமாக்கும். பசியை நன்கு தூண்டும். குடல் பூச்சிகளை அகற்றும், வாத, கப நோய்களை கட்டுப்படுத்தும்.
குறிப்பாக பால் சுறா கருவாடு சுறா கரு வகைகளில் மிகச் சிறந்ததாகும்.
தாய்ப்பால் பெருக்கத்திற்கும் மாதவிலக்கு பலவீன சீரமைப்பு உடல் தோற்றத்திற்கும், இது பெரிதும் உதவும்.
பிரசவித்த பெண்களுக்கு இதை சமைத்து தரும் பழக்கம் இன்றளவும், நமது கிராமங்களில் உள்ளது.
திருக்கை மீன் கருவாடு
சுறா கருவாட்டிற்க்கு உள்ள அனைத்து மருத்துவ பல இந்த திருக்கை மீன் கருவாட்டிற்கு உண்டு.
உல்லமீன் மீன் கருவாடு
அடிக்கடி இந்த கருவாட்டை உண்டு வந்தால், சிரங்கு, பேதி, அரிப்பு, தடிப்பு உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.
கிழங்கான் கருவாடு
இந்த கருவாடு செரிமான திறனை அதிகரிக்கும், பசியை தூண்டும், மலச்சிக்கல் போக்கும், உடலுக்கு நல்ல செழுமையும் தரும்.
கொக்கு மீன் கருவாடு
சளி தொடர்பான நோய்களை நீக்கும், குறிப்பாக கக்குவா இருமலை நீக்க பெரிதும் உதவும்.
வரால் கருவாடு
உடலுக்கு வலு தரும், உடல் நோய்களை போக்கும், செரிமான திறனை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பாற்றலை பேருக்கும்.
ஆற்று ஆரல் மீன் கருவாடு
மலக்கட்டு,சிறுநீர் கட்டு உடல் வலிகளை போக்க வல்ல இக்கருவாடு கப நோய்கள், கரப்பான், பசி மந்தம், அதிக உமிழ்நீர் சிறப்பு முதலான நோய்களை உண்டாக்கும்.
கடல் ஆரல் மீன் கருவாட்டில், இத்தகைய பாதிப்புகள் கொஞ்சம் குறைவாகவே உள்ளது.
கருப்பு வௌவால் மீன் கருவாடு.
விந்து சுரப்பு, தாய்ப்பால் அதிகரிக்கும். அதிகமாக உட்கொண்டால் நீரிழிவு, சொறிநீர் சிரங்கு முதலான நோய்களை உண்டாக்கும்.
கெண்டை கருவாடு
குடல் வாதம், வயிற்று வலி உள்ளிட்ட வயிற்று நோய்கள், நீரிழிவு, புண், சிரங்கு உள்ளிட்ட நோய்களை உண்டாக்கக்கூடியது.
மயரிக் கருவாடு
அடிக்கடி ஏற்படும் சோர்வு, மயக்கம், ஒரு சில வயிற்று நோய்கள், கப வாத பித்தம் மிகுதிப்பால் உள்ளிட்ட பல நோய்களை குணமாக்கக் கூடியது.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil
- மூக்கிரட்டை கீரை பயன்கள் | Mookirattai Keerai Benefits in tamil
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil
- பூந்திக்கொட்டை பயன்கள் | Boondi Kottai Uses in Tamil
- ஆளி விதை பயன்கள் | Ali Vithai Benefits in Tamil
- துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil
- கிராம்பு பயன்கள் | Kirambu Benefits in Tamil
அனைவரும் நமது வளைத்ததின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்
16 Comments
Comments are closed.