தேங்காய் பால் நன்மைகள் | Coconut Milk Benefits in Tamil
தேங்காயில் உள்ள அதிக கொழுப்பு உள்ளத, இது நமது உடலுக்கு கேடு விளைவித்து மாரடைப்பை ஏற்படுத்தும் என்றும் இதனால் தேங்காய் மற்றும் அதை சார்ந்த உணவுகளை சாப்பிடக் கூடாது என்றும் கூறுவார்கள். அது உண்மை அல்ல.
உண்மையில், தேங்காயில் பல நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வகையில் இங்கே நாம் பார்க்கப் போவது, தினமும் ஒரு கப் தேங்காய்ப்பால் சாப்பிட்டால் நமக்கு உள்ள எந்தெந்த பிரச்சனைகள் தீரும்? யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும்? என்பதைப் பற்றி பார்க்கப் போகிறோம்.
தேங்காய்ப் பாலில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் சி, வைட்டமின் ஈ, தயாமின், நியாசின், பாண்டோதெனிக் அமிலம், ரிபோஃப்ளேவின் மேலும், தாது உப்புக்களான கால்சியம், தாமிரம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், துத்தநாகம்,பொட்டாசியம் போன்றவைகள் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளன.
இத்தனை சத்துக்கள் நிறைந்த தேங்காய்ப்பால் எந்தெந்த நோய்களை குணப்படுத்துகிறது என்று பார்ப்போம்.
ரத்த சோகை
போதுமான இரும்புச்சத்து உடலில் இல்லாமல் இருப்பதால் பலருக்கும் இரும்பு சத்து குறைபாடு ஏற்பட்டு, உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் ரத்த சோகை உண்டாக்கும்.
ஒரு கப் தேங்காய்ப் பாலில் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்பு சத்தில் இருபத்து ஐந்து சதவீதம் கிடைத்துவிடும்.
எனவே சிறியவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கப் தேங்காய் பாலை அருந்துவதால் இரும்புச் சத்து கிடைத்து ரத்த சோகை நீங்கும்.
உடல் எடை
உடல் எடை குறைய உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு தேங்காய்ப்பால் சரியான தீர்வு. அதாவது, தேங்காய்ப்பால் விரைவிலேயே பசியை அடங்க செய்யும்.
அதனால், அதிக உணவு சாப்பிடுவதை தடுத்து உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.
வாதம்
பொதுவாக குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு முடக்குவாதம் ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளது. இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.
எனவே, கீழ்வாதம் இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். அதே போன்று இதில் உள்ள அதிக அளவு பொட்டாசியம் ரத்தக் கொதிப்பின் அளவைக் குறைக்க உதவும்.
கொழுப்பு
முக்கியமாக தேங்காய்ப் பாலில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளில் ஐம்பது சதவீதம் லாரிக் அமிலம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.
எனவே, தேங்காய் பாலினை உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து, நல்ல கொழுப்பின் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி
இதில் விட்டமின் C நிறைந்திருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தும். முக்கியமாக, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டக்கூடிய மோனோலாரின் என்னும் பொருள் தேங்காயில் மட்டும்தான் அதிகமாக இருக்கிறது.
இது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதுடன் ரத்த கொழுப்பை குறைப்பதற்கும் உதவுகிறது. தேங்காயை தவிர, இந்த சக்தி இயற்கையாகவே கிடைக்கும் இன்னொரு இடம், தாய்ப்பால் மட்டுமே.
உடல் பலம்
வயது முதிர்வின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சத்துக்கள் கிடைக்காததாலும், சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள், நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது.
அவர்கள், வாரத்திற்கு மூன்று முறையாவது தேங்காய்ப்பால் சாப்பிட்டு வந்தால், தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்குத்தன்மை தளர்ந்து உடலுக்கு நல்ல பலத்தை தரும்.
எலும்பு
எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து மிக அவசியமாகும். அதே போன்று, பாஸ்பரஸ் சத்தும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
அதாவது பாஸ்பரஸ் உடலில் இருக்கும் அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது. தேங்காய்ப்பாலில் கால்சியம் மற்றும் அதிக அளவு பாஸ்பரஸ் உள்ளதால் தேங்காய்ப்பால் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
சருமம்
தேங்காய்ப்பால் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி தோலில் பளபளப்பு தன்மை அதிகரிக்கும்.
தோலின் நிறத்தையும் கூட்டி இளமை தோற்றத்தையும் தக்க வைக்கிறது. கேரள மக்கள் சரும பொலிவுடன் இருப்பதற்கு காரணம் அவர்கள் தினமும் தேங்காய் பால் அல்லது தேங்காயுடன் தொடர்புடைய உணவுகளை சாப்பிடுவதால்தான்.
குடல் புண்கள்
முக்கியமாக வயிற்றுப்புண் ஆற தேங்காய்ப்பால் போன்று மருந்து எதுவும் இல்லை. எனவே, வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளவர்கள் தேங்காய்ப்பால் சாப்பிட்டு வந்தால் விரைவிலேயே புண்கள் ஆறிவிடும்.
மேலும்
எந்தவித வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்யும். உடல் சூட்டைத் தணிக்கும்.
இதில் உள்ள மெக்னீசியம், தசை பிடிப்பு, மனப்பதற்றம் மற்றும் மன அழுத்தம் இவற்றைக் குறைத்து நரம்புகளை அமைதிப்படுத்துகிறது.
ஒரு கப் தேங்காய்ப் பாலில் 89 மில்லிகிராம் மெக்னீசியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக எதையுமே அளவாக பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வராது. பொதுவாக பசுவின் பால் ஒத்துக் கொள்ளாதவர்கள் கூட தேங்காய் பாலை சாப்பிடலாம்.
தேங்காய் பாலை வெறும் வயிற்றில் மற்றும் எந்த நேரத்தில் குடித்தாலும் உடலுக்கு நல்லதுதான். எனவே, இவ்வளவு நன்மைகள் கொண்ட தேங்காய் பாலை இனி நீங்களும் சாப்பிட்டு பயன்பெறுங்கள்.
இதனையும் படிக்கலாமே
உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.
2 Comments
Comments are closed.