ஆமணக்கு எண்ணெய் பயன்கள் | Amanakku Oil Uses in Tamil
தாவரங்களில் பல கோடி வகைகள் இருக்கின்றன. சில தாவரங்கள் உணவாக பயன்படுகின்றன. வேறு சில தாவரங்கள் மருத்துவ மூலிகைகளாகவும் உதவுகின்றன.
இத்தகைய சில தாவரங்களில் இருந்து எண்ணெய் வகைகளை தயாரிக்க முடிகின்றது. அந்த எண்ணெய்கள் பல வகையிலும் மனிதர்களுக்கு உதவுகின்றன.
அப்படி சிறந்த குணங்கள் வாய்ந்த ஒரு எண்ணெய்தான், விளக்கெண்ணெய் என்று அழைக்கப்படும் ஆமணக்கு எண்ணெய்.
இந்த பதிவில் எண்ணற்ற நன்மைகள் உடைய விளக்கெண்ணெய் மருத்துவ பயன்களை பற்றித்தான் பார்க்க போகிறோம்.
மலசிக்கல்
சிலருக்கு எப்பொழுதும் மலச்சிக்கல் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கின்றது. இதற்கு என்னதான், நவீன மருந்துகள், எடுத்துக் கொண்டாலும் அந்த மருந்துகள் வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள், விளக்கெண்ணெயில் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும்.
ஆனால், இந்த முறைய தினமும் கடைபிடிக்கக் கூடாது.
தோல் வியாதிகள்
தோலில் பல வகையான தொற்று வியாதிகளான சொறி, சிரங்கு போன்றவற்றிற்கு விளக்கெண்ணெய் சிறப்பாக செயல்படுகின்றது.
விளக்கெண்ணெய்யை சில துளிகளை இந்த சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் இந்த பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
சுளுக்கு
நமது உடம்பின் சில பகுதிகளில் தசைகள் முறுக்கிக் கொள்வதால் சுளுக்கு ஏற்படுகின்றது. மேலும், உடலில் ஏதாவது ஒரு அடிபட்டாலும் அந்த இடம் வீங்கி விடுகின்றது.
விளக்கெண்ணெயின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி அந்த இடத்தின் மீது ஒத்தனம் கொடுக்க, வீக்கம் விரைவில் குறையும்.
பாத வெடிப்பு
உடலில் பித்தத்தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்புகள் அதிகம் ஏற்படும். இப்படிப்பட்ட நபர்கள், தினமும் உறங்கச் செல்லும் முன்பு விளக்கெண்ணை சில துளிகளை பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் சரியாகும்.
தலைமுடி
அனைவருக்குமே தலைமுடி நன்றாக ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும். விளக்கெண்ணெயின் சில துளிகளை தேங்காய் எண்ணையுடன் கலந்து தலைமுடிக்கு தேய்த்து வந்தால், தலைமுடி உதிர்வது நிற்கும்.
மிக இளம் வயதிலேயே, தலைமுடி நரைத்தல் போன்ற பிரச்சனைகளும் தீரும்.
அடிபட்ட புண்கள்
உடலின் எப்பகுதியிலாவது சிராய்ப்புக்கள் போன்றவை ஏற்பட்டால், அந்த இடத்தில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சிறிது நேரத்தில் நின்றாலும் நாளடைவில் அந்த இடம் புண்ணாகி விடுகின்றது.
விளக்கெண்ணெயின் சில துளிகளை, தினமும் அடிபட்ட புண்களின் மீது விட்டு வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.
மூட்டு வலி
நடுத்தர வயது முதல் முதியோர்கள் வரை, அனைவரையும் பாதிக்கும் பிரச்சனையாக, மூட்டு வலி பிரச்சனை இருக்கின்றது.
தினமும் சில துளிகள் விளக்கெண்ணெய்யை உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் தடவி வந்தால் வலி ஏற்படுவது நீங்கும்.
Arthritis போன்ற தீவிர மூட்டுகள் சார்ந்த பிரச்சனைகளும் நீங்கும்.
கண்
இன்று பெரும்பாலானவர்கள், பல மணி நேரம் தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து பணிபுரிகின்றனர். இதனால் கண்களின் மீது அதிக அழுத்தம் ஏற்படுகின்றது.
இது எதிர்காலத்தில் கண் பார்வைத் திறனை பாதிக்கும். தினமும் சில துளி விளக்கெண்ணையை கண்களின் மீது தடவிக்கொண்டு உறங்க கண்கள் குளிர்ச்சி அடையும்.
மேலும்
மேற்கண்ட பலன்களை காட்டிலும் தொப்புளி விளக்கெண்ணெய் வைத்த நிறைய படங்கள் கிடைக்கும். நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புள் தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா?
குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது.
வாரம் ஒருமுறை தொப்புளில் விளக்கெண்ணெய் தடவி வாருங்கள். இதனால் உடல் சூடு குறையும். முழங்கால் மற்றும் மூட்டு வலிகள், கால் குடைச்சல் குணமாகிறது. நரம்பு பாதிப்பு அனைத்தும் குணமாகிறது.
உடல் நடுக்கம், சோர்வு மற்றும் கணைய பாதிப்புகள் குணமாகின்றது. கர்ப்பப்பை வலுப்பெறுகின்றது. நன்றாக தூக்கம் வரும்.
பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும். இது போன்று ஆமணக்கு நன்மைகள் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கின்றது.
நாட்டு மருந்து கடைகளில் தரமான ஆமணக்கு எண்ணெய் கிடைக்கும்.
இதனையும் படிக்கலாமே
- அரைக்கீரை பயன்கள் | Arai Keerai Benefits in Tamil(Opens in a new browser tab)
- சப்போட்டா பழத்தின் நன்மைகள் | Sapota Fruit Benefits in Tamil(Opens in a new browser tab)
- வாழைப்பூ பயன்கள் | Valaipoo Health Benefits in Tamil(Opens in a new browser tab)
- ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil(Opens in a new browser tab)
- கூகை கிழங்கு பயன்கள் | Arrowroot in Tamil(Opens in a new browser tab)
- எள்ளு பயன்கள் | Ellu Benefits in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
19 Comments
Comments are closed.