நாட்டு சக்கரை மருத்துவ பயன்கள் | Brown Sugar in Tamil
அனைத்து வகையிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ள ஒரு பண்டம் தான் நாட்டு சர்க்கரை.
கரும்புச் சாறு பாகு ஆக காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலை வரும் பொழுது அதன் சத்துக்களில் மாற்றம் ஏற்படுகிறது.
அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்த பிறகு பழுப்பு (brown) நிறத்தில் கிடைக்கும் பொருளே கரும்பு சர்க்கரையாகும்.
இந்த கரும்பு சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய அனைத்து சத்துக்களும் உள்ளன.
நோய் எதிர்ப்பு
நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும்.
இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது, நாட்டுச்சர்க்கரை.
ரத்தம் சுத்திகரிக்கப்படும்
நாடு சர்க்கரை உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலையும் செய்கிறது.
நாட்டுச் சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள, அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.
இதயம்
முக்கியமாக, நாட்டுச் சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.
சர்க்கரை பிரச்சனை
வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நம்ம உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்தக்கூடும்.
நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
குழந்தைகளுக்கு கொடுக்கலாமா
குழந்தைகளுக்கு இனிப்பு தரும் பொழுது வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதே நல்லது.
ஆனால், நாட்டு சர்க்கரையிலும் கலப்படம் கண்களை கட்டுகிறது. ஆகவே விசாரித்து தெளிவாக வாங்குங்கள்.
மேலும்
வாந்தி, பித்தம் மற்றும் சுவையற்ற தன்மையை இது போக்குகிறது. கெட்டியான சளியை கரைக்கிறது.
நாட்டு சர்க்கரையில் இரும்பு சத்து, பாஸ்பரஸ் எனப்படுகின்ற எரிசத்து மற்றும் சுண்ணாம்பு சத்து என்பது மிக பல மடங்கு அதிகம் உள்ளது என்பதை அறிவியல் சோதனைகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.
இந்த சத்துக்கள் அனைத்தும், மனிதன் வாழ்க்கைக்கு மிகப்பெரிய உயிர்நாடி. உதாரணமாக பாஸ்பரஸ் மூளை வளர்ச்சிக்கும், கால்சியம் எலும்புக்கும், இரும்பு சத்து இரத்தத்தில், ஹீமோகுளோபின் உற்பத்திக்கும், மிக உகந்தது.
ஒரு ஆய்வறிக்கையில், நாட்டுச் சர்க்கரை வாதம் மற்றும் செரிமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதாக எழுதப்பட்டுள்ளது.
நவீன மருத்துவத்தில், நாட்டுச் சர்க்கரை தொண்டையில் மற்றும் நுரையீரலில் புழுதி மற்றும் புகையினால் ஏற்படும் சிதைவை, தடுக்கும் குணம் கொண்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எத்தகைய உணவுப் பொருள்களிலும் உள்ள, தீய ரசாயன தன்மையை முறிக்கும் தன்மை நாட்டுச் சர்க்கரைக்கு உள்ளதால், புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க அதை உட்கொள்ளலாம் என்பது, ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
நமது உடலில் ஏற்படும் நோயை உண்டு பண்ணும் அமிலத்தன்மையை வெளியேற்றி ஆரோக்கியத்தை வழங்கும் காரத்தன்மையை வழங்குகிறது என நிறைய பேர், இதன் அருமையை சொல்லி இருக்கிறார்கள்.
சீனி என்று அழைக்கப்படும், வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, tea, coffee, இனிப்பு பண்டங்களுக்கு, நாட்டுச் சர்க்கரையை, பயன்படுத்த தொடங்குங்கள்.
வெள்ளை சீ னி, விஷம் என்பதை, பலமுறை வலியுறுத்தி வருகின்றோம் பனங்கற்கண்டு, கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரைக்கு நீங்க மாறிவிட்டால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil(Opens in a new browser tab)
- நிலாவரை சூரணம் பயன்கள் | Nilavarai Uses in Tamil(Opens in a new browser tab)
- சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டியமாகா படிக்கவும்.
11 Comments
Comments are closed.