சுக்கின் பயன்கள் | Sukku Uses in Tamil
சுக்கின் பயன்கள் | sukku uses in tamil இஞ்சியை நன்றாக காய வைத்து, அதில் உள்ள தண்ணீர் வற்றிய பின்னர் நமக்கு கிடப்பது தான் சுக்கு.
பொதுவாக குழந்தைகளுக்கு பசி எடுக்கவில்லை என்றாலும், வயிறானது மந்தத்தன்மை அடைந்தாலும் சிறிதளவில் சுக்கு அரைத்து ஊற்று என்று நம் வீட்டில் உள்ள பாட்டி நமக்கு இன்றளவும் கை வைத்தியம் சொல்வார்கள்.
மிகவும் எளிதில் எல்லா மளிகை கடையிலும் சுகிகு கிடைப்பதால், இதன் பெருமையானது பெரும்பாலானோருக்கு தெரியாமல் போய்விட்டது. நம் அன்றாட உபாதைகளை தீர்க்க இந்த சுக்கு பலவகையில் உபயோகப்படுகின்றது எவ்வாறு இந்த பதிவின் மூலம், நாம் தெரிந்து கொள்ளலாம்.
வயிறு எரிச்சல் நீங்க
கரும்பு சாறுடன் சுக்கு சிறிதளவு சேர்த்து, தினந்தோறும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில், இந்த சாறினை குடித்து வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.
மூட்டு வலியை நீக்க
சுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகம் கொண்டது. இரண்டு spoon சுக்குத்தூளுடன், ஒரு tumbler தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிதளவு தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் மூட்டில் ஏற்படும் வழி குணமாகும்.
இருமலை நீக்க
சுக்கு தூளை பயன்படுத்தி தேநீர் தயாரித்து தொடர்ந்து குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
தலைபாரம் நீங்க
ஒரு சிலருக்கு வேலை சுமையின் காரணமாகவும் , நெடு தூர பயணம் மேற்கொண்டாலும், தலைபாரம் வந்துவிடும்.
தலையில் நீர் கோர்த்த இரு புருவங்களுக்கும், கீழ் பகுதியில், தாங்க முடியாத வலி வந்துவிடும்.
இதனை நீக்க சுக்கை சொரசொரப்பாக இருக்கும் கல்லின் உரசை, அதிலிருந்து கிடைக்கும் விழுதுடன் சிறிதளவு பெருங்காயத்தூளை சேர்த்து, தலையில் பற்று போல போட்டுக் கொண்டால், சிறிது நேரத்திலேயே, நல்ல பலன் கிடைக்கும்.தலையில் இருக்கும் நீரை, உறிஞ்சும் சக்தி, சுக்குக்கு உள்ளது.
பல் கூச்சம், வாய் துர்நாற்றம் நீங்கும்
சிறிதளவு சுக்குப்பொடியுடன் உப்பு சேர்த்தும், தினமும் காலையில் பல் விளக்கும் பொழுது, நம் வாய் துர்நாற்றத்தையும், பல் கூச்சத்தையும் நீக்கும்.
வாய்வு பிடிப்பு குணமாக
அதிகமான வேலை சுமை காரணமாக, நன்றாக சாப்பிடாமல், நன்றாக தூங்காமல் இருந்தால், மன அழுத்தம் ஏற்படும். இதன் மூலம், வயிற்றில், வாய்வு பிடிப்பு உண்டாகின்றது.
அப்போது, அரை spoon சுக்குத்தூளுடன், அரை spoon சர்க்கரை சேர்த்து, வாயில் போட்டு, தண்ணீர் குடித்து விட்ட உடனடி நிவாரணம் அடையலாம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்க பெறுவதற்கு பொதுவாக நம் அனைவருமே வாரத்தில் ஒருமுறையேனும் சுக்குத்தூள் சேர்த்து குழம்பினை சாப்பிட்டு வருவது உடலுக்கு மிகவும் நல்லது.
வயதானவர்களுக்கு ஏற்படும் வாத நோய், மலச்சிக்கல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் வராம இருப்பதற்கு இது உதவியாக இருக்கும்.
ஒரு டம்ளர் தண்ணீருடன் அரை phone சுக்கு தூளை சேர்த்து, வெதுவெதுப்பாக சூடுபடுத்தி தேன் சேர்த்து வடிகட்டி குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து நம் தொப்பையின் அளவையும் குறைந்து நம் உடல் எடை சீராக இருக்கும்.
சிறுநீரகத் தொற்று
சில நேரங்களில் சிறுநீரானது முழுமையாக வெளியேறாமல் தேங்கி விட்டால் சிறுநீர் தொற்று ஏற்படும். வெதுவெதுப்பான பாலில் சுக்கு தூளையும், நாட்டு சர்க்கரையையும் சேர்த்து, குடித்து வந்தால், சிறுநீரக நோய்த்தொற்றானது நீங்கும்.
சுக்கு பற்றி சில தகவல்கள்
வேப்பம்பட்டை சேர்த்து, கஷாயமாக கயிற்றி குடித்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள வாதமானது சரியாகிவிடும்.
சுக்கு, மிளகு மற்றும் தனியா, திப்பிலி மற்றும் சித்தரத்தை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கஷாயம் வைத்து குடித்து வருவதன் மூலம் ஆகா நீண்ட நாட்களாக குணமாகாமல் இருந்த சளியானது, மூன்றே நாளில் குணமாகும்.
சுக்கு, கருப்பட்டி மற்றும் மிளகு இவைகளை தண்ணீரில் சேர்த்து நன்றாக காய வைத்து அதனை வடிகட்டி தினசரி குடித்து வர, உடல் சோர்வானதும் நீக்கப்பட்டு, சுறுசுறுப்பாகும். சுக்குடன் துளசி இலையையும் சேர்த்து சாப்பிட்டால் வாந்தி குமட்டல் நிற்கும்.
சுக்கு ஐந்து மிளகு வெற்றிலை இவைகளை நன்றாக மென்று தப்பித்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தால் தேள் பூரான், விஷப்பூச்சி கடித்த விஷம் முறியும்.
உடல் எடை
அரை தேக்கரண்டி சுக்கு பொடியை ஒரு டம்ளர் நீரில் கலந்து வெதுவெதுப்பான சூட்டில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அவ்வாறு குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து உடல் எடை கட்டுக்குள் வரும்.
ஆரோக்கியமான வாழ்க்கை
அனைவரும் விரும்ப கூடிய ஒன்று ஆரோக்கியமான வாழ்க்கை தான். வாரத்தில் ஒரு முறையாவது சுக்கு தூளை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வருவது மிகவும் நலல்து. வயது முதிர்ந்த பின் ஏற்படுகின்ற ,மலசிக்கல், ஆஸ்துமா இது போன்ற பிரச்சனைகள் வ்ரர்மல் தடுக்கும்.
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
19 Comments
Comments are closed.