சீரக தண்ணீர் பயன்கள்
நம்ம அனைவரின் சமையலறையிலும் இருக்கக்கூடிய, ஒரு அற்புதமான பொருள், சீரகம்.சீர்கூட்டல் அகம் ,அகத்தில் இருக்கக்கூடிய, பல பிரச்சனைகளை, சீர் செய்ய வல்லது, என்பதனால்தான், சீரகம் என்ற பெயர். சீரகத்தை சமையலில் நம் அனைவர் வீடுகளிலும் பயன்படுத்தி வருகிறோம்.
யாருக்கும் தெரியாத உண்மை தெரியுமா உங்களுக்கு?
இந்த சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி குடித்துவர மிகவும் நல்லது.
என, நம்மில் எத்தன பேருக்கு தெரியும்? அதிலும் சீரக தண்ணீர் காலை வெறும் வயிற்றில் குடித்துவர, இரட்டிப்பான நன்மையை பெற முடியும். அப்படி இந்த சீரக தண்ணீரை குடித்து வர, நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? மற்றும் குணமாகக்கூடிய நோய்கள் என்ன? பற்றி இங்கு காண்போம்.
செரிமானம் சீராகும்
சீரகம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், சீரக தண்ணீர் காலை வெறும் வயிற்றில் குடித்து வர, செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு, செரிமானம் எளிதில் நடைபெறும்.
செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று வாய்வு தொல்லை, நெஞ்செரிச்சல் இது போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த சீரக தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வர எளிதில் குணமாகும்.
அதே சமயம் சீரகத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலையும் தடுக்கிறது.
நோய் எதிர் சக்தி அதிகரிக்கும்
சீரகம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவுகிறது.
அடிக்கடி தொற்று நோய்கள்னால அவதிப்படுபவர்கள், சீரக தண்ணீர் குடித்துவர, நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். இதன் மூலமாக பிற நோய்கள் வருவது தடுக்கப்படும்.
இரத்த அழுத்தம் சீராகும்
அதிக உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள், காலை வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து வரவும்.
இதில் இருக்கக்கூடிய potassium உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்குறது.
தொடர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் இந்த நீரை தொடர்ந்து குடித்துவர இரத்த அழுத்தம் முற்றிலும் குணமாகும்.
ஹீமோகுளோபின் அளவே அதிகரிக்கும்
இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், காலை வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை குடித்து வர, இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான இரும்புச்சத்து, உடலில் புதிய இரத்த செல்களை உற்பத்தி செய்கிறது. இதன் மூலமாக இரத்த சோகை குணமாகும்.
மாதவிடாய் வலியைப் போக்குகிறது
பெண்கள் பலரும், மாதவிடாய் காலத்தில் அதிக வலியினால் அவதிப்படுகிரார்கள்.
அந்த சமயத்தில், இந்த காட்சி வடிகட்டிய சீரக தண்ணீரை குடித்து வர, மாதவிடாய் வலி கட்டுப்படும்.
உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்
சீரக தண்ணீரில் potassium, கால்சியம், செலினியம், manganese போன்ற பொருட்கள் அடங்கியுள்ளது.
காலையில் தேநீர்க்கு பதிலாக, இந்த சீரக தண்ணீர் குடித்து வர, அன்றைய நாள் முழுவதும், உடல் புத்துணர்ச்சி உடன் இருக்கும்.
முடி வளர்ச்சி அதிகரிக்கும்
சீரகம் அகத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மட்டுமில்லாமல், அழகு சார்ந்த பல பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு தரக்கூடியதாகவும் இருக்கிறது.
தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது சீரக தண்ணீர். தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளான, தலைமுடி உதிர்வு, நரைமுடி, இது போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் இந்த ஜீரக தண்ணீர் குடித்து வர இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் கூந்தலை வலுவாக்குவதோடு தலைமுடி வளர்வதற்கும் உதவியாக இருக்கிறது.
சீரக தண்ணீர் பற்றிஆங்கிலத்தில் படிக்க கீலே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.