மீன் மாத்திரை பயன்கள் | Fish Oil Tablet Benefits Tamil

மீன் மாத்திரை பயன்கள் | Fish Oil Tablet Benefits Tamil

பொதுவாக தாவரங்களில் இருந்து சத்துக்கள் கிடைப்பது போன்றே மீன்களிடம் இருந்தும் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளது.

உண்மையில் நம் உடலுக்கு மிகவும் அவசியமான அதே நேரம் இயற்கையாக எளிதில் கிடைக்காத பல வகை சத்து மிகப்பெரிய கடல் மீன்களில் உள்ளது.

இந்த மீன்களின் கல்லீரல்ல இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சுத்திகரித்து பிறகு capsuleகளில் அடைத்து விற்கப்படுகிறது. இதுதான், card liver oil என்று சொல்லப்படுகிற மீன் எண்ணெய் மாத்திரை.

இந்த மீன் எண்ணெய் மாத்திரையை தினமும் சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

fish oil tablet benefits tamil

ஒமேகா மூன்று

இந்த மீன் எண்ணெய் மாத்திரையில் நமது உடலுக்குத் தேவையான மிக முக்கியமான சத்துக்கள் உள்ளது. அதில் ஒன்று ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம்.

இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் நமது உடலுக்கு மிகவும் தேவையான ஒன்று. அதே சமயம் இது நமது உடலில் தானாக சுரப்பது கிடையாது. எனவே, நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்துதான் பெற முடியும்.

அந்த வகையில் இந்த மீன் எண்ணெய் மாத்திரையில் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் அதிகம் காணப்படுகிறது.

ஞாபக சக்தி

இந்த ஒமேகா மூன்றுகொழுப்பு அமிலம் நமது மூளைக்கும், இதயத்திற்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். அதாவது ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் பொழுது நமது அறிவாற்றலும் நினைவாற்றலும், மேன்மை அடைகிறது.

எனவே ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம்.

முக்கியமாக மோசமான ஜங்க் உணவுகள் மூலம் மூளையில் ஏற்படும் தொய்வுகளை ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் சரி செய்கிறது.

அதேபோன்று படிக்கும் மாணவர்கள் தினமும் இந்த மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றலையும் கற்கும் திறனையும் அதிகரிக்க முடியும்.

கெட்ட கொழுப்பு

இந்த ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம், நமது உடலில் இருக்கும் ட்ரைகிளிசரைடுகள் மற்றும், கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.

எனவே ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுப்பதால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற இதயம் சார்ந்த நோய்கள் தாக்காமல் தடுக்கலாம்.

எனவே தினமும் மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டு வந்தால் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் தேவையான அளவு கிடைத்து இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஜப்பானில் உள்ள மக்களுக்கு இதய வராமல் இருப்பதற்கான காரணமாக கூறப்படுவது அவர்கள் உணவில் கடல் மீன்கள் அதிக அளவில் இருப்பதுதான் என ஆய்வுகளால் கண்டறியப்பட்டுள்ளது.

மீன் எண்ணெய் மாத்திரை தீமைகள்

வீக்கம்

மூட்டு வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் குணமடைய உதவுகிறது. பொதுவா நோய் காரணமாகவோ, அல்லது நாம் சாதாரணமாக கீழே விழுந்து அடிப்பட்ட காயங்களினாலோ ஏற்படும் வீக்கங்களை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அதுவே பின்னாளில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இது போன்ற பின் விளைவுகள் ஏற்படாமல் தடுக்கவும் ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் உதவுகிறது. அதாவது இதில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடென்ட் ரத்தத்தில் இருக்கிற ஃப்ரீ ரேடிக்கல்கள் மூலக்கூறுகளை கட்டுப்படுத்தி வீக்கங்களில் நோய் பாதிப்பு ஏற்படாமல் காக்கிறது.

வைட்டமின் டி

நமது உடலுக்கு பல விதமான நன்மைகளைத் தருகிறது இந்த வைட்டமின் டி. நோய் எதிர்ப்பு மண்டலத்தை, மேலும் வலுவாக்கவும் செய்கிறது. உடலில், எலும்புகள் மற்றும் பற்களின் இயல்பான வளர்ச்சிக்கு, உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருக்க வேண்டியது அவசியம்.

உண்மையில் உடலுக்குப் போதுமான வைட்டமின் டி கிடைக்கவில்லை என்றால் எலும்புகள் மென்மையாகி உடையவும் கூடும்.

அந்த வகையில் நமது உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்க, இந்த மீன் எண்ணெய் மாத்திரை மூலமாகவும் பெற முடியும்.

அதே போன்று இந்த வைட்டமின் டி மாதவிடாய் நிற்கும் காலத்தில் எலும்பு புரை நோய்க்கான ஆபத்தையும், குறைக்கச் செய்கிறது.

அதனால்தா பெண்களுக்கு வைட்டமின் டி அவசியம் என பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும் இது மூட்டுகளை வலுவடைய செய்வதால் மூட்டு வலிகளை, குறைக்கவும் செய்கிறது.

அதே போன்று கடினமான உணவுகளை மென்று சாப்பிட பற்கள் வலுவாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் பற்கள் வலுவாக இருக்க வைட்டமின் டி அவசியம்.

meen ennai tablet uses in tamil

மன அழுத்தம்

மூளையில் செரட்டோனின் அளவு குறைவாக இருப்பதாலேயே மன அழுத்தங்கள் உருவாகின்றன. இதனை, மீன் எண்ணெய் மாத்திரை சரி செய்கிறது

மீன் எண்ணெய் மாத்திரையில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் வைட்டமின் டி சத்து மூளையில் செரட்டோனின் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கிறது.

மேலும் இது நரம்புகளில் உண்டாகும் பாதிப்பு போக்கி மனதை அமைதியாக்கி படபடப்பு தன்மை குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன

கண்பார்வை

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மீன் எண்ணெய் மாத்திரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் பார்வை குறைபாடு நீங்கும்.

மேலும், நரம்புகளின் அழுத்தங்களால் ஏற்படும் கண் அழுத்த நோயையும் தொடர்ந்து மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் குணப்படுத்த முடியும்.

meen ennai tablet uses in tamil

சருமம்

மீன் மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது நமது தோலின் ஈரத்தன்மை நீண்ட நேரம் நீடிக்க செய்து சருமத்தை பொலிவாக மாற்றுகிறது.

பொதுவாக இந்த மீன் எண்ணெய் மாத்திரையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

அதே சமயம் கர்ப்பிணி பெண்கள் வேறு நோய்களுக்காக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் உங்கள் மருத்துவரை ஆலோசித்துவிட்டு பின்னர் சாப்பிடவேண்டும்.

மீன் மாத்திரை பயன்கள்

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயாமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning