தினமும் ஓரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் ஓரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

வெயில் காலத்திற்கு ஏற்ற காய்கறிகளில் வெள்ளரிக்காய் மிகச்சிறந்த பயன்களை அளிக்கக்கூடியது.

வெள்ளரிக்காயில் அதிக அளவு நீர்ச்சத்தும் நார்ச்சத்து வைடமன் ஏ , வைடமன் பி, வைடமன் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் என உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.

பொதுவாக அந்தந்த காலநிலைகளில் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் போன்றவை பல நோய்களுக்கு மருந்தாக அமையக்கூடியவை.

அந்த வகையில், கோடைக்காலத்தில் அதிகம் கிடைக்கும் வெள்ளரிக்காய் பல நோய்களை தீர்க்க கூடியது.

வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து அதிகம் வெளியேறுவதால் அதனை சமநிலை படுத்தி உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பது மிக முக்கியம்.

அந்த வகையில் கோடைக்காலத்தில் தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் இருபது நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள்

உடல் சூடு, பித்தம்

வெள்ளரிக்காய் சாப்பிட்டு வரும்பொழுது, உடலுக்கு தேவையான பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் கிடைக்கப் பெற்று உடலில் நீர் சத்தை அதிகப்படுத்தி உடல் சூடு, உடல் வறட்சி, அதிக தாகம், பித்த நோய்கள் போன்றவற்றை தீர்க்கிறது.

மலச்சிக்கலுக்கு தீர்வு

வெள்ளரிக்காயில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான சக்தியை மேம்படுத்தவும், தீராத மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது.

சருமப் பாதுகாப்பு

சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் வெள்ளரிக்காயில் நிறைந்திருப்பதால், சரும செல்களை பாதுகாக்கின்றது.

வெள்ளரிக்காயை அரைத்து அதன் சாற்றினை முகத்தில் தடவி குளிர்ந்த நீரால் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் முகக் கருமையய் போக்கும்.

புற்று நோய் தடுப்பு

வெள்ளரிக்காயில் நிறைந்துள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

கருப்பை, மார்பகம், இரைப்பை தொடர்பான புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இரத்த சுத்திகரிப்பு

வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வரும்பொழுது, இரத்தத்தில் உள்ள கழிவுகளையும், நச்சு க்களையும் வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

யூரிக் அமிலம்

நமது உடலில் உள்ள உப்புத்தன்மை, நச்சுக்கள் போன்றவை யூரிக் அமிலமாக மாறி, எலும்பு மூட்டுகளில் தங்குவதனால் எலும்பு பலவீனம் ஆகுகிறது.

வெள்ளரிக்காயில் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் தன்மை உள்ளதால் யூரிக் அமிலத்தை வெளியேற்றி எலும்புகளை பாதுகாக்கிறது.

சிறுநீரக பாதிப்பு

வெள்ளரிக்காய் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டதால், சிறுநீரகத்தில் கழிவுகள் தேங்காமல் பார்த்துக் கொள்கிறது.

மேலும் சிறுநீரகக் கற்கள், சிறுநீரக தொற்று, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்றவற்றை குணப்படுத்துகின்றது.

உயர் இரத்த அழுத்தம்

வெள்ளரிக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் நிறைந்து இருப்பதால், இரத்த குழாய்களில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெள்ளரிக்க்காயினை சாப்பிட்டு வருவது சிறந்தது.

உடற்பருமன் குறைக்க

வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு செல்களை கரைத்து, வயிற்றில் சேரும் தேவையற்ற கொழுப்பு,தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

வாய் பராமரிப்பு

வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் வாயில் உள்ள நுண்கிருமிகளை அழித்து பற்களையும், ஈறுகளையும் வலுப்படுத்துகின்றது.

கண் ஆரோக்கியம்

கண் நரம்புகள் புத்துணர்வு பெறுவதற்கு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வருவது நலல்து.

வெள்ளரிக்காயை வட்ட வடிவில் அறுத்து, கண்களின் மீது சிறிது நேரம் வைத்திருந்தால், கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நாளடைவில் குறையும். கண் எரிச்சல், கண் சூடு போன்றவை குணமாகும்.

கல்லீரல் பாதுகாப்பு

கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது. மேலும் கல்லீரலில் உள்ள தொற்றுக்களை வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சர்க்கரை நோய் பாதிப்பு

வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள், கணையத்தில் இன்சுலின் சுரப்பதை மேம்படுத்த உதவுகிறது.

இதனால் இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

மூளை திறன் மேம்பாடு

மூளை செல்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.

மூளையில் இரத்த ஓட்டத்தை சீராக்கி, மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

முடி மற்றும் நகங்கள்

சிலிக்கா என்ற கனிமம் வெள்ளரிக்காயில் நிறைந்துள்ளதால் இதை சாப்பிட்டு வரும்பொழுது நகங்கள் மற்றும் தலைமுடியை பளபளப்பாகவும் திடமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் உள்ள சல்பர் என்னும் சத்து முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கற்பகால ஆரோக்கியம்

பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீர்ச்சத்து போதுமான அளவில் இருக்க வேண்டும்.

வெள்ளரிக்காயை பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதால் நீசத்து அதிகப்படுத்தி உடலுக்கு தேவையான அனைத்து வைடமின்களும் மினரல்களும் கிடைக்கப் பெற்று கருவின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

வளர்ச்சிதை மாற்றம்

நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உட்கிரகித்துக் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரித்து ஆற்றலாக மாற்றி வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

வயிற்று புண் & நெஞ்செரிச்சல்

வயிற்றுக் புண்களை குறைக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது. வயிற்றில் அதிக அமிலச் சுறப்பை சமநிலை படுத்தி வயிற்றுப்புண் உருவாகாமல் தடுக்கிறது.

அதிக ஆக்சிஜன்

வெள்ளரிக்காய் இல் அதிக அன்டிஅக்ஸடன்ஸ் குணங்கள் நிறைந்துள்ளன.

இது இரத்தத்தில் அதிக பிராணவாயுவை எடுத்துச் சென்று உடலில் உள்ள செல்களையும் திசுக்களையும் சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றது.

நோய் எதிர்ப்பு சக்தி

கோடை காலங்களில் வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் வராமல் தடுத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கிறது.

ஊட்டச்சத்து

ஊட்டச்சத்து நிறைந்த உணவினை சாப்பிட்டு வந்தாலே எந்த விதமான நோய்களும் வராமல் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

வெள்ளரிக்காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்,வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், நார்சத்துக்கள் அடங்கியுள்ளன.

அனைவரும் கோடைகாலங்களில் இதனை பெரும்பாலும் விரும்பி வெள்ளரிக்காய் சாப்பிடுவர். ஆகவே சுலபமாக உடலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து விடுகிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை அளவுக்கதிகமாக உள்ளவர்கள் எடையை குறைக்க அதிகஅளவில் சிரமப்படுவார்கள்.

வெள்ளரிக்காய் உடலில் கொழுப்பு படியாமல் தடுக்க உதவியாக உள்ளது. இது அதீத பசியுணர்வினை கட்டுப்படுதுகிறது.

மேலும் நீர் சுரப்பினை அதிகப்படுத்துவதால் உடல் எடையினை குறைக்க முக்கியப்பங்குவகிக்கிறது.

 

மேற்கூறிய எண்ணிலடங்காத மருத்துவ குணங்களைக் கொண்ட வெள்ளரிக்காயை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், எண்ணற்ற பாதிப்புகளை தடுத்து, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும்.

இதையும் படிக்கலாமே:

திப்பிலியின் பயன்கள் பற்றி படிக்க

English overview :

Here we have cucumber benefits tamil.It is also called as or cucumber benefits tamil or Vellarikai gunangal Tamil or Vellarikka payangal Tamil or Vellarikkai uses Tamil or benefits of cucumber in tamil or வெள்ளரிக்காய் பயன்கள் or வெள்ளரிக்காய் மருத்துவ பயன்கள் or Vellarikkai benefits in Tamil or Vellarikkai uses in Tamil or Vellarikka payangal in Tamil or Vellarikai gunangal in Tamil or Vellarikkai maruthuva payangal in Tamil or cucumber meaning in tamil or benefits of cucumber in tamil.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning