வெங்காயத்தின் பயன்கள் | Onion uses in tamil
வெங்காயத்தின் பயன்கள் | Onion uses in tamil
வெங்காயம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் நாம் தவறாமல் பயன்படுத்தும் பொருள் வெங்காயம்.
இது பல்லாரி வெங்காயம் , வெள்ளை வெங்காயம் , சாம்பார் வெங்காயம் இப்படி நிறைய வகைகள் இருக்கிறது.
அதிலும் சாம்பார் வெங்காயம் என்று சொல்லக்கூடிய சின்ன வெங்காயத்தில் தான் மற்ற வெங்காயத்தை காட்டிலும் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
அதற்கு இதில் அடங்கி இருக்கக்கூடிய சத்துக்கள் தான் காரணம்.
பொதுவாக வெங்காயத்தில் உள்ள சத்துக்கள் அதிகப்படியான சல்பர் வைட்டமின் சி, வைடமன் பி, ஃபோலிக் அமிலம், குரோமிப்யம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து அடங்கியுள்ளது.
கியூர் சிட்டி என்று சொல்லக்கூடிய ஃப்ளோரைடுகளும் நல்ல அளவில் இருக்கிறது.
இவ்வளவு சத்துக்கள் கொண்ட வெங்காயத்தை நாம் பச்சையாக சாப்பிடும்போது இரட்டிப்பான நன்மையை பெற முடியும்.
உடலில் ஏற்படக்கூடிய பல நோய்களை மிக எளிதில் வந்து குணமாக்க முடியும். பல லட்சங்கள் செலவு செய்தும் கூட குணமாக்க முடியாத நோய்களை மிக சுலபமாக குணமாக்கும் ஆற்றல் இந்த பச்சை வெங்காயத்திற்கு உண்டு.
மாரடைப்பு வராமல் தடுக்கும்
வெங்காயத்தில் சல்பர் என்று சொல்லக்கூடிய அறிய வகை புரதம் அடங்கியிருக்கிறது.
இது இரத்தத்தில் இருக்க கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் என்று சொல்லக்கூடிய எல்டிஎல் போன்ற கொலஸ்ட்ராலை கரைக்கும்.
மேலும் இரத்தக் குழாய்களில் இரத்தத் தட்டுக்கள் உறைவதை தடுக்கும்.
மட்டும் வெங்காயத்தில் இருக்கக்கூடிய கியூஸிட்டி என்னும் பொருள் தமனி சுவர்களில் கொழுப்பு படிவதையும் தடுத்து தமனித்தடிப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
இதனால் மாரடைப்பு என்று சொல்லக்கூடிய அபாயகரமான பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
சுவாச பிரச்சனைகளை குணமாக்கும்
சுவாச சம்மந்தமான பிரச்சனைகளான ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அலர்ஜி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இந்த வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவர இதில் இருக்கக்கூடிய அலட்சி எதிர்ப்பு பண்புகள், சுவாசக்குழாய் தசைகளை ரிழிலாக்ஸ் அடைய செய்து எளிதில் சுருங்கி விரியவும் உதவி செய்யும்.
மேலும் தும்மல்,சளி, மூக்கில் சளி வடிதல், இருமல்,காய்ச்சல், போன்ற பிரச்சனைகள் வராமலும் தடுக்கும் ஆற்றல் இந்த வெங்காயத்திற்கு உண்டு.
அல்சர் வராமல் தடுக்கும்
வெங்காயத்தில் உள்ள தன்மை இறப்பையில் உள்ள கிருமிகளை அழிக்கும்.
இதில் இருக்கக்கூடிய பைட்டோ கெமிக்கல்கள் அல்சர் என்று சொல்லக்கூடிய இறப்பை புண்கள் வராமல் தடுக்கும்.
இதன் காரணமாகத்தான் காரமான உணவுகளை பரிமாறும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக வைத்து பரிமாறுவது உண்டு.
மலச்சிக்கல் தடுக்கப்படும்
அடிக்கடி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் வயிற்றில் நல்ல பாக்டிரியா அளவினை அதிகரிக்கும்.
இது குடலின் இயக்கத்தையும் சீராக்கும். இதனால் மலசிக்கல் ஏற்படுவது முற்றிலும் தடுக்கபடுகிறது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்
வெங்காயத்தில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவு. மேலும் கொழுப்புகள் கிடையாது .
இது இரத்த நாளங்களின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
எனவே அதிக இரத்த அழுத்தம் போன்ற பிரட்சனைகளினால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவர இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
இரத்தம் சுத்தமாகும்
இதனை தினமும் பச்சையாக சாப்பிட்டுவர இது உடலில் தீங்கு விளைவிக்கக்கூடிய டாக்சின்களை வெளியேற்றும்.
இதன் மூலமாக இரத்தம் சுத்தமாகவும் மட்டும் உடல் சுறுசுறுப்பாக இருப்பதற்கும் உதவி செய்யும்.
புற்றுநோய் வராமல் தடுக்கும்
இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்களான டைசல்பைடுகள், ட்ரைசல்பைடுகள் போன்றவை உடலில் புற்று உண்டாவதற்கான காரணிகளை அளிக்கும்.
உடலில் புற்று நோய் எதிர்ப்பு பண்புகளையும் அதிகரிக்கும். எனவே தினமும் சிறிது வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டு வர அபாயகரமான புற்றுநோய் கூட வராமல் தடுக்க முடியும்.
செரிமான பிரச்சனைகளை குணமாக்கும்
செரிமான பிரச்சனைகளான அஜீர்ணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள், சின்ன வெங்காயத்தினை பச்சையாக உணவு உண்ணும்போது சேர்த்து சாப்பிட்டு வர செரிமானம் எளிதில் நடைபெறும். செரிமானப் பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
இரத்தச்சோகை குணமாகும்
உடலில் புதிய இரத்தம் உருவாவதற்கு மிக அவசியமான சத்து இரும்புச்சத்து. வெங்காயத்தில் இரும்புச்சத்து நல்ல அளவில் இருக்கிறது.
இது உடலில் புதிய இரத்தத் தட்டுக்கள் உருவாக்க உதவியாக இருக்கும். இதன் மூலமாக இரத்தச்சோகை குணமாகும்.
எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் சிறிது சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவர மிகவும் நல்லது.
ஆண்மை குறைபாடுகளை போக்கும்
உடலில் ஏற்பட்ட பிற நோய்கள் காரணமாக நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டுவர வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருட்கள் நரம்புகளை வலுவாக்கும்.
இதன் மூலமாக ஆண்மை குறைபாடு நீங்கும்.
தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்
குழந்தை பெற்ற தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருப்பவர்கள் சிறிது வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலமாக தாய்ப்பால் சுரப்பானது அதிகரிக்கும்.
உடல் சூட்டை போக்கும்
அதிக வெயில் காரணமாக உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் காலையில் பழைய சாதத்துடன் சிறிது சின்ன வெங்காயத்தை பச்சையாக சேர்த்து சாப்பிட்டு வர உடல் சூடு தணியும் மற்றும் உடல் குளிர்ச்சியாகும்.