எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் அளவு
நீர்ச்சத்து – 50 கிராம்.
கொழுப்பு – 1.0 கிராம்.
புரதம் – 1.4 கிராம்.
மாவுப்பொருள் – 11.0 கிராம்.
தாதுப்பொருள் – 0.8 கிராம்.
நார்ச்சத்து – 1.2 கிராம்.
சுண்ணாம்புச் சத்து – 0.80 மி.கி.
பாஸ்பரஸ் – 0.20 மி.கி.
இரும்புச் சத்து – 0.4 மி.கி.
கரோட்டின் – 12.மி.கி.
தையாமின் – 0.2 மி.கி.
நியாசின் – 0.1 மி.கி.
வைட்டமின் ஏ – 1.8 மி.கி.
பி – 1.5 மி.கி.
சி – 63.0 மி.கி.
எலுமிச்சை அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு அற்புதமான பழம்.
எலுமிச்சை உடலின் எடையை குறைக்க மட்டுமே பயன்படுகிறது என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் நம் உடம்பை ஏற்படக்கூடிய பல அரிய நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது எலுமிச்சை.
சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சையில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.
அது மட்டும் இல்லாமல், வைட்டமின் A, விட்டமின் E, coolin, calcium, magnesium, phosphorus, potassium மற்றும் சிறிதளவு சோடியமும் அடங்கியுள்ளது.
இரத்த அழுத்தம் சீராகும்
கால்சியம்
மெக்னீசியம்
பொட்டாசியம்
இவை மூன்றும் இரத்த நாளங்களை தளர்வடையச் செய்து, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
எலுமிச்சை சாற்றில் இருக்கக்கூடிய மற்றும் கரட்டினாய்டுகள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமலும் தடுக்கிறது.
எனவே அதிக இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுவர்கள் இந்த எலுமிச்சை சாற்றினை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் குடித்து வர இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
உடல் எடையை குறைக்கும்
அதிக உடல் எடையினால் அவதிப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை சாற்றுடன், ஒரு தேக்கரண்டி அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்பட்டு, உடல் எடை மிக விரைவில் குறையும்.
செரிமான பிரச்சனைகள் குணமாகும்
செரிமான பிரச்சனைகளான அஜீரணம் வயிறு உப்புசம் மற்றும் வாய்வு தொல்லை போன்ற பிரச்சனையால அவதிப்படுபவர்கள், எலுமிச்சை சாற்றை சூடான வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்துவர வயிற்றில் உள்ள அமிலங்கள் சமநிலை படுத்தப்படும்.
இதன் மூலமாக செரிமான சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.
நெஞ்சு செளி குணமாகும்
நெஞ்சில் கபம் கட்டி, இருமலினால் அவதிப்படுபவர்கள், எலுமிச்சை சாற்றை சுத்தமான தேனுடன் கலந்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வருவதன் மூலம் நெஞ்சுச் சளி கரைந்து வெளியேறும்.
ஜலதோசாம் உண்டாக்ககூடிய இருமலையும் போக்ககூடியது இந்த எலுமிச்சைச் சாறு.
புற்றுநோய் வராம தடுக்கும்
எலுமிச்சையில் டிலைமோனின் என்ற ஆன்டிஆக்ஸிசிடின் அதிக அளவில் இருக்கிறது. இது பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
மேலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. எலுமிச்சையில் இருக்கக்கூடிய நரிஞ்செனி என்னும் ஃப்லொவ்வனாய்டுகள் DNAவை பாதுகாத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
மற்றும் பழுதுபட்ட DNAவும் சீர்சேய் உதவுகிறது. இதன் மூலமாக புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது.
உடலை சுத்தம் செய்கிறது
தினமும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடித்துவர உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தம் ஆகும்.
இதன் மூலமாக, உடலின் பிற உறுப்புகள் டாக்ஸின்கள் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
சருமத்தினை பொலிவாக வைத்து கொள்ள உதவுகிறது.
கண்களின் ஆரோக்கியத்திற்கு
து கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எலுமிச்சை சாற்றில் இருக்கக்கூடிய கரட்டிநாயுடுகள், உடலில் வைட்டமின் Aயாக மாற்றப்பட்டு கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் தசை சீர்கேடுகளையும் தடுக்கின்றது. எனவே கண் சம்பந்தமான பிரச்சனையால் அவதிப்படுகிறவங்களும், எலுமிச்சை சாற்றை அருந்தி வர மிகவும் நல்லது.
15 Comments
Comments are closed.