கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu
கருப்பு உளுந்து பயன்கள் | Karuppu Ulunthu இட்லி, தோசை இல்லாத ஒரு நாளையும், உளுந்து வடை இல்லாத ஒரு விசேஷ நாட்களையோ நினைத்து பார்க்க முடியாது.
இந்த மூன்றுக்கும் அடிப்படையானது உளுந்து ஒன்றுதான்.
இந்த பண்டங்கள் அனைத்தும் கோயில் பிரசாதமாக முதன் முதலில் பிரபலமாக இருந்தது.
பொதுவாக உளுந்தூ தோள் அகற்றப்படாத உருண்டை வடிவில் உள்ளதை கருப்பு உளுந்து என்று அழைக்கின்றோம்.
நீல் உருளை வடிவத்தில் பளபளப்பாக இருக்கும் .
இது தனி நறுமணம் அற்றது. அதே நேரம் மண் வாசனை அதிகமாகவே இருக்கும்.
இந்தியாவில் அதிகமாக பயிரிடப்படுகிறது .
இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பயிர் வகை உளுந்து தான். பஞ்சமி உணவு வகையில் மிகவும் பிரபலம் பெற்றது.
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது கருப்பு உளுந்தினை பயன்படுத்துவது நல்லது.
ஏனென்றால் உளுந்து தோலில் குளுக்கோனஸ் ஸ்டாக் பெசன்ட் ஆறடிஸ் என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது.
இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுதான் காரணம்.
அதே போல் இதில் கால்சியமும், பாஸ்பரசும் சம அளவுல உள்ளது. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டும் என்று உளுந்து தோளினை நீக்கி அதில் உள்ள ஊட்டச்சத்து இழக்க வேண்டாம்.
கருப்பு உளுந்து முழுதாகவோ இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி தோசை மாவில் பயன்படுத்தப்படுது மிகவும் நல்லது.
இட்லி சிறந்த உணவு என்று பெறுவதற்கு மாவில் சேர்க்கப்படும் உளுந்தும், மிகவும் முக்கியமிக்க காரணமா அமைகிறது. வட இந்தியாவில் , தால் மெக்கானிக்கல்லில் இதுவே அடிப்படை.
வெங்காயம், பூண்டு சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாக சாப்பிடுவதும் உண்டு.
பெண்களுக்கு உகந்தது
பெண்களின் உடலுக்கு வலிமை தரும் என்பதனால் அதிகமா பரிந்துரைக்கப்படுது. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
இது பெண்களுக்கு உகந்தது, மாதவிடாய் மட்டுமல்லாமல் மாதவிடாய் காலத்துல ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும். தாய்ப்பால் பெருக, உளுந்து பயன்படும்.
சிறுநீரக பிரட்சனை
அதுமட்டுமல்லாமல் இதில் அக்கசாலிக் அமிலம் இருப்பதால, சிறுநீரக கல்கள் உள்ளவர்கள் இதை அதிக அளவில் சாப்பிடக்கூடாது. சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங் , உலர்ந்து உரிய தண்ணியை தினமும் குடிக்கலாம்.
இனிப்பு சுவையோடு குளிர்ச்சி தன்மை கொண்டிருப்பதால் கோடை காலத்தில் அதிகமாக பயன்படுத்தலாம்.பித்தத்தை தணிக்க உதவுகிறது.முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு மிகவும் நல்லது.
இதில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருப்பதனால் உடைலை தூய்மைப்படுத்தி உடலில் உள்ள நச்சுப் பொருட்கள அகற்றி செரிமான அமைப்பை ஆரோக்கியமாக பராமரிக்கவும், வயிற்றுப்போக்கை தடுக்கவும் உதவுகிறது.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. உயர் இரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துக்கொண்டு வருவதன் மூலமாக இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இந்தியாவின் பல பகுதியில் உளுந்து தட்டை கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்துதற்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இட்லி, தோசை, வடை போன்றவை வெள்ளையாக இருக்க வேண்டும் என்று உணவகங்கள் நினைத்த காரணத்தினால் வெள்ளை உளுந்து பிரபலம் ஆகிவிட்டது.
அரிசியோடு சேர்ந்த மாவாக அரைக்கப்பட்டு இட்லி தோசைக்கு தனியாக அரைக்கப்பட்டு சமைக்க பயன்படுத்தப்படுது.
தமிழ் மங்கல நிகழ்வுகளில் உளுத்தம் சோறு நெடுங்காலமாக இடம் பெற்று வருவதாக, இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உளுந்து மாவை கொடுக்கலாம். மலத்தை வெளித்தளவும் இது உதவுகிறது .
தோல் நீக்கப்பட்ட உளுந்து பால் உணர்வை தூண்டக்கூடியதாக கருதப்படுது. இதை அதிகமாக சாப்பிட வாயுவை அதிகரிக்கிறது.
உளுந்தினால் செய்யப்படும் உளுந்து தயிலம் சித்த மருத்துவத்தில் வாத நோய்களை குணப்படுத்த பயன்படுதாம்.
முளைகட்டிய உழுந்து மூட்டு வலிக்கு சிறந்தது. எலும்பு முறிவிற்கு தண்ணீரில் ஊறவைத்து காய வைத்து அரைத்த கருப்பு உளுந்தமாவு துணி சுற்றி கட்டுதல் என்பது சித்த மருத்துவ வழிமுறை.
கடுக்காயின் மருத்துவகுணம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்ய்யவும் Click
11 Comments
Comments are closed.