ஜவ்வரிசி பயன்கள் | Javvarisi Health Benefits Tamil
நம் அன்றாட வாழ்வில் நிறைய உணவுப் பொருட்கள பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதில் உள்ள நன்மைகள் நம்மில் எத்தன பேருக்கு தெரியும்?
இன்று ஜவ்வரிசி சாப்பிடுவதனால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் அதனுடைய மருத்துவ குணங்கள் பயன்கள் இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜவ்வரிசி அனைத்து விழாக்களுக்கும் பயன்படுகிறது. பார்ப்பதற்கு முத்துக்கள் போல் இருக்கும் ஜவ்வரிசியில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
எளிதாக செரிமானம் ஆகக்கூடிய ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இந்த ஜவ்வரிசி, நம் உடலுக்குத் ஆற்றலை வழங்குவதோடு எலும்புகளை வலுவடைய செய்கிறது.
எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவு என்பதால், தாராளமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ஜவ்வரிசியை, பால் மற்றும் தண்ணீரில் சேர்த்து நன்றாக வேகவைத்து, சர்க்கரை அல்லது மசாலா சேர்த்து, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, சமைத்து சாப்பிடலாம்.
உடல் எடை கூட
உடல் ஒல்லியாக இருப்பவர்கள் இயற்கையான முறையில் உடலை கூட்ட நினைப்பவர்களுக்கு இந்த ஜவ்வரிசி ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
ஜவ்வரிசியில் அதிக அளவு ஆற்றல் உள்ளதால் உடல் எடை குறைவாக இருக்கும் நபர்கள் ஜவ்வரிசியை ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட ஒல்லியாக இருக்கும் தேகம் உடல் பருமனாக காணலாம்.
பசியின்மை
பசியின்மையால் அவதிப்படுபவர்கள் ஜவ்வரிசியை தொடர்ந்து சிறிது சாப்பிட்டால், நேரத்திற்கு பசிக்க ஆரம்பிக்கும்.
நேரத்திற்கு சரியாக சாப்பிட்டால் இயற்கையாகவே உடல் எடை கூடும். ஆனால், நாம் சாப்பிடு உணவு, ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா? என்பது மிக அவசியமான ஒன்று.
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும், செல்களை புதுப்பிக்கவும் உதவும்.
ஜவ்வரிசியில் இவ்வளவு பயன்களா? என்று வியக்கும் அளவுக்கு பயன்கள் உள்ளது.
ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும், பெரிதும் உதவுகிறது.
இந்த ஜவ்வரிசி என்பது பதப்படுத்தப்பட்ட ஒரு சைவ உணவாகும். இந்த ஜவ்வரிசி எதிலிருந்து கிடைக்கிறது? என்று பார்த்தால் மரவள்ளிக்கிழங்கில் இருந்து எடுக்கப்படும் starchல் இருந்து தயாரிக்கப்படுகிறது.
ஜவ்வரிசியின் பயன்கள் எப்படி அதிகமோ, அதைப் போல, அதன் பெயர்களும் அதிகம். சாகோ, சகுடான்னா, சகோடான்னா, சவாரி என்றும் அழைக்கின்றனர்.
எண்ணற்ற பெயர்களைக் கொண்ட இந்த ஜவ்வரிசி மருத்துவ குணங்களுக்காக எப்படி பயன்படுகிறது? என்பதைக் காணலாம்.
சீதபேதி
சீதபேதியால் அவதிப்படுபவர்கள், ஜவ்வரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, அதனால் ஏற்படும் சோர்வு சரியாகிவிடும். சீதபேதி நிற்பதற்கு ஒரு எளிய வீட்டு வைத்தியமாக ஜவ்வரிசியை பயன்படுத்தலாம்.
பாதிப்பிற்கு உள்ளானவர்கள் பெரியவர்களாக இருக்கும் பட்சத்தில் இருபது கிராம் ஜவ்வரிசியை நீரில் போட்டு, கொதிக்க வைத்து மிதமான பதத்தில் குடித்து வர விரைவில் சரியாகும். செரிமானம் ஆகக்கூடிய உணவு என்பதால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
அல்சர்
இளம் வயதினரையும் பாதிக்கும் அல்சர் நோயை குணப்படுத்த ஜவ்வரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வர ulcer புண்கள் விரைவாக குணமாகும்.
செரிமானம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள சுலபமாக கடந்து செல்ல குடல் சுவற்றி ஒரு வழுவழுப்பு தன்மையை உண்டாக்குகிறது. இதனால் அல்சர் நோய் குணமாகும்.
ரத்த சோகை
பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை நீக்க மற்றும் உடலில் ஹீமோகுளோபின் மற்றும் ரத்த செவப்பு அணுக்களை அதிகரிக்க செய்யும் ஆற்றல் ஜவ்வரிசிக்கு உண்டு.
அதனால் ஜவ்வரிசியால் ஆன உணவுகளை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதன் மூலம் ரத்த சோகை நோய் வராம காக்கலாம்.
சர்க்கரை நோய்
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய மிகக் கொடுமையான வியாதிகளில் சர்க்கரை நோயும் ஒன்று. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவே சரியான விதத்தில் வைத்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
நீரிழிவு நோயாளிகள் ஜவ்வரிசியை தாராளமாக பயன்படுத்தலாம். கார்போஹைட்ரேட், புரதம், கனிமங்கள் ஆகிய சத்துக்கள் இருப்பதால் அரிசிக்கு பதிலாக மாற்று உணவாகவும் பயன்படுத்தலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியான விகிதத்தில் காக்கப்படுகிறது.
வைட்டமின் சத்து
ஜவ்வரிசி வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக ஜவ்வரிசியில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.
கால்சியம் சத்து, ஜவ்வரிசியில் அதிகமாக உள்ளதால் பற்களின் enamel சீக்கிரத்தில் தேய்ந்து போகாமல் தடுக்க உதவுகிறது.
இதயம்
இதயத்தை சீராக அதிலும் ஜவ்வரிசியின் பங்கு உள்ளது. எப்படி எல்லாம், ஜவ்வரிசி பயன்படுகிறது? என்பதைக் காணலாம். ஜவ்வரிசியால் ஆன உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதைத் தடுக்க முடிகிறது.
இருதய பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கலாம். ஜவ்வரிசியைக் கொண்டு, பல உணவுப் பொருட்கள தயாரிக்கலாம். இதில் புரதம்,வைட்டமின் மற்றும் கனிமகள் குறைந்து காணப்படுவதனால் எந்த விதமான உணவுகளிலும் சேர்த்து சத்தான உணவாக பெற முடியும்.
ஜவ்வரிசியை கொண்டு செய்யப்படும் உணவு
ஜவ்வரிசியை கொண்டு cake, bread, ஜவ்வரிசி லட்டு, ஜவ்வரிசி உப்புமா மற்றும் soup வகையிலும் இதை பயன்படுத்தலாம்.
ஜவ்வரிசியை கொண்டு jam தயாரிக்கலாம். பாயாசம் இல்லாத வீட்டு விசேஷம் நிறைவு பெறாது. அந்த அளவிற்கு இதில் சத்துக்களும் சுவையும் அதிகம்.
இதனையும் படிக்கலாமே
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா
- ஓமம் மருத்துவ பயன்கள் | Omam Benefits in Tamil
- அதிமதுரம் பயன்கள் | Athimathuram Uses in Tamil
- கசகசா பயன்கள் | Kasa Kasa Health Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
14 Comments
Comments are closed.