முட்டையை அதிகமாக சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. முட்டையை சாப்பிடும்பொழுது சர்க்கரை உடலில் அதிகரிக்க வாய்ப்புள்ளதா என்பதைப் பற்றி பார்ப்போம்.
முட்டை பலருக்கும் பிடித்த ஒரு அற்புதமான உணவு என்று சொல்லலாம். முட்டையை நாம் பலவிதமாக சமைத்து உண்கிறோம்.
மிக வேகமாக எளிய முறையில் முட்டையை சமைத்து சாப்பிடலாம். இதனால் பலருக்கு இது விருப்பமான உணவாக அமைகிறது.
காலையில் அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் கூட இரண்டு முட்டையை ஆப்ஆயில் செய்து சாப்பிட்டு விட்டு சென்று விடுவார்கள்.
அப்படி மிகவும் எளிதாக சமைத்து சாப்பிடக் கூடிய ஒரு பொருள் முட்டை. இந்த முட்டையை சாப்பிடுவது நீரிழிவு நோய் அபாயத்தை அதிகரிக்கும் என பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிசணல் சமீபத்தில் வெளியிட்ட ஒரு ஆய்வில் கூறியுள்ளது.
இந்த ஆய்வு ஆனது ஆயிரத்தி தொள்ளாயிரத்து தொன்னூற்றி ஒன்றில் இருந்து இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டுக்கு இடையில் சீனாவில் சராசரியாக ஐம்பது வயதுடைய 8545 பெரியவர்களிடம் நடத்தப்பட்டுள்ளது.
1991-1993 ஆம் ஆண்டு வரை பதினாறு கிராம் வரை எடுக்கப்பட்டு இருந்த முட்டை நுகர் வானது. 2000-2004 ஆம் ஆண்டிற்குள் இருபத்தி ஆறு கிராம் ஆக அதிகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இது முப்பத்தி ஒரு கிராம் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து இந்த முட்டையின் நுகர்வு ஆனது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2009 ஆம் ஆண்டிற்கு அடுத்து கடந்த பத்து ஆண்டுகளில் இது மிகப்பெரிய அளவில் மாற்றத்தை கண்டுள்ளது.
ஒரு நாளைக்கு முப்பத்தி எட்டு கிராம் முட்டையை உட்கொள்வது நீரிழிவு நோயின் அபாயத்தை ஏறக்குறைய இருபத்தி ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒரு நாளைக்கு ஐம்பது கிராமுக்கு மேல் முட்டை சாப்பிடுவது அறுபது சதவிகிதம் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரித்துள்ளது என்று அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் பெரும்பாலான மக்கள் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நீரழிவு நோய் அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம் உணவு முறை என்று சொல்லப்படுகிறது.
சரிவிகித உணவை தவிர்த்து மக்கள் அவர்களுக்கு பிடித்த உணவை அதிக அளவில் சாப்பிடுவதே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் முட்டையும் ஒன்றாக இருக்கிறதாம்.
இந்த ஆய்வு எடுக்கப்பட்ட சீனாவில் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொண்ணூற்றிஒன்றாம் ஆண்டில் இருந்து இரண்டாயிரத்தி ஒன்பது வரை முட்டை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நீண்ட காலமாக இந்த முட்டையை எடுத்து வந்து சீன பெரியவர்கள் இடையே நீரிழிவு நோயின் அபாயம் சுமார் இருபத்தி ஐந்து சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
தவறாமல் தொடர்ந்து அதிக அளவில் முட்டைகளை சாப்பிடுபவர்களுக்கு, அதாவது ஒரு முட்டைக்கு மேலே சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோயின் அளவு அறுபது சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நீரிழிவு நோயானது எல்லா நோய்களை விடவும் மிகவும் மோசமானது என்பது நம்மை பலருக்கும் தெரிந்த ஒன்று.
இது போன்ற இந்த பிரச்சனைகளை தடுக்க ஆரோக்கியமான உணவு பழக்கத்தையும் அன்றாடம் உடற்பயிற்சியையும் செய்து வாருங்கள்.
முட்டை தினமும் எடுத்துக்கொள்வது தவறு இல்லை. ஆனால் அதே அளவிற்கு உங்கள் உடல் உழைப்பும் இருந்தால் நீங்கள் சாப்பிடு.
முட்டை உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். அதை தவிர்த்து எந்த உடல் உழைப்பும் இல்லாமல் தொடர்ந்து முட்டையை நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது அது பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
முட்டை அதிகம் சாப்பிடுவது நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகரிக்கிறது என கண்டறியப்பட்டால் உம் முட்டை மட்டுமல்ல பல விதமானஉணவுகள் நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகரிக்கும் என்பதே உண்மை.
எல்லாவற்றையும் விட உங்கள் உடல் உழைப்பு குறைவாக இருந்தால் நீரிழிவு நோய் மட்டுமல்ல எல்லா விதமான நோய்களும் உங்கள் உடலில் ஒட்டிக்கொள்ளும்.
ஆகையால் தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பிற்கு ஏற்ற வேலைகளை செய்து உங்கள் உடலில் ஆரோக்கியமாக வைத்திருங்கள். அதுபோல, உங்கள் உணவிலும் ஒரு கண் வைத்திருங்கள்.
நல்ல ஆரோக்கியமான சத்துள்ள உணவை சரியான அளவில் எடுத்துக்கொண்டால் போதும். உங்கள் உடல் ஆரோக்கியம் எப்பொழுதும் சிறப்பாகவே இருக்கும்.
12 Comments
Comments are closed.